Kumbam rasi palan: கும்ப ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. அதிர்ஷ்டமும் இருக்கு
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் கும்ப ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கும்ப ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
கும்பம்
கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தினருக்கு ராசி, லக்னத்தில் ராகு உள்ளவரை எவரும் உங்களுக்கு நிகரில்லை என்கிற எண்ணம் ஏற்படும். அதனைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கே தெரியாமல் தவறு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். போதை அல்லது புகழ் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்படும். 6 ஆம் இடத்தில் குரு உச்சமடைவதால் வங்கிகளில் கடன் கேட்டவுடன் கிடைக்கும். வாகனக் கடன், கல்விக் கடன் போன்றவை கிடைக்கும்.
பண வரவு
பெரிய பணம் உங்களுக்கு வந்து சேரும். உயரிய பதவிகளில் அமரும் வாய்ப்புள்ளது. விவாகரத்து போன்றவை சாதகமாக முடியும். குடும்பத்தில் அந்நியோன்யம் இல்லாமல் கவலைப்பட்டு வருபவர்களுக்கு, ஜாதகத்தில் குரு அல்லது சனி வக்கிரமாக இருந்தால் மீண்டும் குடும்பம் நவம்பர் மாதத்துக்குப் பிறகு இணையும். அதுவரை பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பகை உணர்வு
பகை உணர்வுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஈகோவை விட்டுவிட்டாலே பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. 10 ஆம் இடத்தில் சூரியனும், செவ்வாயும் இணைகின்றனர். புதன் வக்கிரம் பெறுகிறார். பின்னர் சுக்கிரன் சேர்கிறார். வேலைப் பளு அதீதமாகும். வேலையை தூக்கியெறியும் சூழல் ஏற்படும். ராகு ராசியில் இருப்பதால் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
கவனம்
இந்த மாதத்தைப் பொருத்தவரை வேலைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கால் முட்டியில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காசு பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். லீஸ் அமைவது, புது இடம், புது வீடு அமையும் யோகம் உண்டாகும். 6 ஆம் இடம் நன்றாக இருப்பதால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.
வழிபாடு
அஜீரண கோளாறு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பெரிய பாதிப்புகள் ஏற்படாது. நரசிம்மர் வழிபாடு, துர்க்கை வழிபாடு மற்றும் துர்க்கைக்கு அபிஷேகம் செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications