Rasi Palan This Week: கும்ப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் பிரச்சனை.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மன அழுத்தத்தை தவிர்ப்பது நல்லது. பரம்பரையாக இருக்கும் நோய்கள், ரத்தத்தில் பரவக்கூடிய நோய் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால் கவனமாக இருப்பது நல்லது. சிறு வயது கும்பர ராசியினருக்கு ஜீரண உறுப்புகள், கழிவுப் பாதையில் சிறு சிறு பாதிப்புகள் கண்டிப்பாக ஏற்படும்.
வாக்குவாதம்
நல்ல நட்பு, நல்ல உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எத்தனை நாட்கள் காத்திருந்தாலும் நல்ல உறவுகள், நட்புகள் கிடைப்பது கஷ்டம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக கண்டிப்பாக கார்த்திகை மாதத்தில் இருந்து எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட கஷ்டங்கள் நீங்கும்.
ஐப்பசியில் கவனம்
ஐப்பசி மாதத்தில் கொஞ்சம் அமைதியகாவும், பொறுமையாகவும் நடந்து கொள்வது நல்லது. சுப விரயத்துக்கான பாக்கியம் உண்டாகும். வார்த்தைக்கு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய வரவுகளுக்கான உத்தரவாதம் ஏற்படும். குடும்பத்தில் செல்வாக்கு கூடும். தனம், வாக்கு, அனுகூலங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.
ரகசியம் காப்பது நன்று
இழுபறியாக இருந்த காரியங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும் அமைப்பு விரைவில் வரும். ரகசியங்களை பரம ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. செல்போனில் பேசும்போதும் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என பார்த்துவிட்டு பேசுவது நல்லது. வேலையாட்கள் விஷயத்திலும் சிறிது கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
உங்களிடம் யாராவது உனக்காக இதை செய்கிறேன், அதை செய்கிறேன் எனக் கூறினால் அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் கடந்து செல்வது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். தவறாமல் தினந்தோறும் நரசிம்மர் வழிபாடு செய்து உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications