Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு எடுத்த காரியத்தில் ஜெயம்.. பேச்சில் ரொம்ப கவனம்
Kumbam Rasi Palan: பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் (Kumbam Rasi Palan).
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மாசி மாதம் முழுவதும் அனுமன், விநாயகர் வழிபாடு ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். கையெழுத்துப் போடுவதற்கு முன்பு மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் துணையின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்ப விஷயத்தில் அந்நியர் தலையிடுவது, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
லாபம் ஏற்படும்
லாபம், சந்தோஷம் உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் சாத்திக்கூறுகள் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சிக்கல்கள் தீரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலரால் பாராட்டப்படும். தாய் வழி உறவு யோக பலத்தைப் பெற்றுத் தரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.
விட்டுக் கொடுங்க
3 குரங்கு பொம்மைகளைப் போல தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. குடும்பத்திலும், வெளியிடத்திலும், உத்தியோகத்திலும், தொழிலிலும், வியாபராத்திலும், படிக்கக்கூடிய இடங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத சங்கடங்களும், மனக் கசப்புகளும், அவமானம் ஏற்படும் சூழல் உள்ளது.
கவனம்
அரசாங்கத்தில் இருப்பவர்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்கள், படிக்கட்டுகள், உயரமான இடங்கள், விஷஜந்துகள், பூச்சிகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். எல்லா விதமான நல்ல விஷயங்களும் நடக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். லாபங்கள் அதிகரிக்கும்.
தொட்டது துலங்கும்
அவசியமில்லாத டென்ஷன், கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்திற்காகத் தவிர மற்றவர்களிடம் பணிந்து போக வேண்டிய தேவையில்லை. விரயத்தில் செவ்வாய் இருப்பதால் அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் பேச்சில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகம். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும்.
வழிபாடு
நீங்கள் எடுக்கும் முடிவுகள், விஷயங்கள் எல்லாமே சாதகமாக முடியும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். ராஜகாளியம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications