Kumbam Rasi Palan: கும்ப ராசி வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் எவை?
Kumbam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Kumbam Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அனுகூலமும், நம்பிக்கையும் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுருங்கிக் கொள்வது நன்மையைத் தரும். இழுபறியாக இருக்கக்கூடிய விஷயங்களில் வாதம் செய்து வம்பை விலை கொடுத்து வாங்காமல் இருப்பது நல்லது.
அனுகூலம்
உத்தியோகம் ரீதியாக எல்லா விஷயமும் சாதகத்தையும், சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். மேலதிகாரிகள் விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. பெரிய வெற்றியும், அனுகூலத்தையும் தரக்கூடிய அமைப்பு உள்ளது. சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களைச் செய்யக்கூடியவர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வது நல்லது.
தொழில்
தாயினால் பிரச்சனை, தாயின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது. 24, 25 ஆம் தேதிகள் நன்றாக இல்லை என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தலை, கண்ணில் அடிபடுவதற்கான வாய்ப்புள்ளது. பெரியவர்களால் ஆபத்துகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் வெளியில் செல்கிறேன் என்கிற நிலை ஏற்படும். நிறைய அழுத்தங்கள் இருக்கும். அரசுத் துறை, மெடிஷனில் இருப்பவர்களுக்கு, ஒப்பந்ததாரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
கோபத்தைக் காட்டி இருப்பதைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீட்டுகள் ரணகளமாக இருக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை, மன அழுத்தம், வேலையில் அழுத்தம் ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் கண், நரம்பு, முதுகு தண்டுவடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக அனுகூலங்கள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம்.
வழிபாடு
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் இனி மாறக்கூடும். விநாயகர் வழிபாடு, அனுமன் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications