கும்ப ராசிக்கு "காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது".. எல்லாமே இனி சக்சஸ்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-weekly-rasi-palan-what-kind-of-benefits-kumbam-aquarius-people-will-get-from-july-28-to-au

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். அனைத்து விதமான முன்னேற்றங்களும், அனுகூலமும் கிடைக்கும். ஆடிப்பெருக்கு வரும் வாரம் என்பதால் முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. இதுவரை இருந்து வந்த தடைகள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.

சொத்துகள் சேரும்

அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். சுப காரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் நடக்கும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் அடுத்தடுத்து நடக்கும் யோகமான காலகட்டமாக இருக்கும். தொலைதூரத்தில் இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை முடிக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.

கடன்கள் தீரும்

பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் கைகூடும். அடிவயிறு, அசிடிட்டி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் தொடர்ந்து முன்னேற்றங்களும், நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும் காலகட்டமாக இருக்கும்.

வெற்றி மேல் வெற்றி வரும்

மனதில் இருந்து வந்த பாரங்கள் நீங்கும். யோக பலன்கள் இந்த ஆடி மாதத்தில் அதிக அளவில் கிடைக்கும். பெரிய அளவிலான வெற்றிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். நிலம், வீடு, முதலீடு தொடர்பான விஷயங்களில் நன்மை ஏற்படும். இதுவரை வராமல் இருந்து வந்த பணங்கள் அனைத்தும் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும். மகிழ்ச்சி பெருகும். மாற்றமும், முன்னேற்றமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதன்கிழமை தோறும் கிருஷ்ணர், நாராயணர் வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அம்மே நாராயணா என்ற மந்திரத்தை கேட்பதும், சொல்லிக் கொண்டே இருப்பதும் ஏற்றத்தை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+