Kumbam Rasi Palan: கும்ப ராசியை சுத்துப் போடும் கிரகங்கள்.. 3 விஷயங்களில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 15 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீண்டநாள் நண்பர்களை அழைத்துப் பேசுவது நன்மையை ஏற்படுத்தும். உறவுமுறையில் உங்களுடைய கஷ்ட காலத்தில் யார் உங்களுடன் இருந்தார்களோ அவரைத் தேடிச் சென்று பேசுவது, சந்திப்பது நன்மையை ஏற்படுத்தும். துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
வேலையில் பாதிப்பு
வழுக்கலான இடங்களில், உயரமான இடங்களில் செல்லும்போது, வண்டி வாகனங்களில் செல்லுபோது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு உங்கள் துணையிடம் கூறுவது நன்மை பயக்கும். மேலதிகாரிகள் உங்களை குறிவைக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு இடமாற்றம் கொடுப்பார்கள். மெமோ கொடுப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு பாதிப்பு வரும் என்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
சிக்கல் தீரும்
வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளித்து வருவது எல்லாவிதமான சங்கடங்களும், பெற்றோர் பெரியோரிடம் இருந்து வந்த சங்கடங்களும் பரிபூரணமாக நீங்கும். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் தீரும். கையெழுத்திடுவதற்கு முன்பு படித்து பார்த்துவிட்டு கையெழுத்திடுவது நன்மையை ஏற்படுத்தும். இல்லையெனில் பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
வார்த்தையில் கவனம்
வார்த்தைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். காது, மூக்கு, தொண்டை, தலைவலி சம்பந்தப்பட்ட விஷயங்களில், தோல் வலி சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். தேவையில்லாத மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் அண்டாமல் இருப்பது யோக பலத்தையும், நம்பிக்கையையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
வழிபாடு
வார்த்தைகளில், கையெழுத்து போடும் விஷயங்களிலும் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். திங்கள்கிழமையில் பெருமாள், தாயார் வழிபாடு செய்வது அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். முதலில் விநாயகரைக் கும்பிட்டுவிட்டு மற்ற தெய்வங்களைக் கும்பிடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications