பொங்கலன்று 12 ராசிக்காரர்கள் தானம் செய்ய வேண்டிய பொருள்கள்?.. என்ன பலன்கள் கிடைக்கும்
சென்னை: ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. மகர சங்கராந்தி தினமான அன்று நான்கு மகா யோகங்கள் உருவாகின்றன. இந்த தினத்தில் சூரிய பகவானை வழிபடுவது பல நற்பலன்களை அள்ளித் தரும். அந்த வகையில், பொங்கல் நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன பொருள்களை எல்லாம் தானம் செய்வதம் மூலம் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள் என்று விரிவாகப் பார்க்கலாம்..
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது சான்றோர் வாக்கு. நாடு செழிக்க, குடும்பம் செழிக்க, விவசாயம் செழிக்க என நாட்டில் உள்ள எல்லா உயிர்களும் செழிப்பாக அருள் புரிபவர் சூரிய பகவான் மகர சங்கராந்தி நாள் வேத சாஸ்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நன்னாளாக கருதப்படுகிறது.

மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைகிறார். மகர சங்கராந்தி தினத்தன்று தானம் செய்வது நல்ல பல பலன்களைத் தரும். பொதுவாகவே தானம் அளிப்பது நம்மை மட்டுமல்லாமல், நம் தலைமுறையையும் சேர்ந்து காக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக மகர சங்கராந்தி தினமான பொங்கல் தினத்தன்று தானம் அளிப்பது பல நன்மைகளை உண்டாக்கும். இந்த நன்னாளில் அதிகாலையில் எழுந்து புனித நதிகளில் நீராடி ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது. தற்போது சூரிய பகவான் உத்தராயணத்தில் இருக்கிறார். மகர ராசிக்குள் நுழையும்போது தட்சிணாயன திசையில் இருப்பார். எனவே, அனைத்து நல்ல காரியங்களையும் தொடங்கலாம்.
இந்த ஆண்டில் மகர சங்கராந்தி தினத்தன்று நான்கு யோகங்கள் உருவாகவுள்ளன. அதுதான் இந்த பொங்கல் தினத்தின் சிறப்பாகும். யோகங்கள் உருவாகும் இந்த மங்களகரமான நாளில் சூரிய பகவானை மனமுருகி வழிபடுவது யோக பலன்களைத் தரும். அந்த வகையில், தங்கள் ராசிக்கு ஏற்ப பொருள்களைத் தானம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
உங்கள் ராசிக்கு, என்ன பொருள்களை தானம் செய்யலாம் வாங்க விரிவாகப் பார்க்கலாம்...
*மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் எள், வெல்லம் தானமாகத் தருவது நல்ல பலன்களைத் தரும்.
*ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் வெல்லம் மற்றும் எள் தானம் செய்வது யோகங்களைத் தரும்.
*மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் நிலவேம்பு கஷாயம், வெல்லத்தை தானமாகத் தரலாம்.
*கடகம்: கடக ராசிக்காரர்கள் எள், அரிசி மற்றும் சர்க்கரை மிட்டாயை தானமாக அளிக்கலாம்.
*சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் வெல்லம், எள், கோதுமை ஆகியவற்றை தானம் தருவது அதிர்ஷ்டத்தை தரும்.
*கன்னி: கன்னி ராசிக்காரர்கள் பொங்கல் நாளில் அரிசி மற்றும் முந்திரி பருப்பில் செய்த கிச்சடியை ஏழைகளுக்கு தானமாக அளிக்கலாம்.
*துலாம்: மகர சங்கராந்தி தினத்தன்று துலாம் ராசிக்காரர்கள் எள், சர்க்கரை மிட்டாய், அரிசி போன்றவற்றை தானமாக அளிப்பது புண்ணியமான பலன்களைத் தரும்.
*விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் எள், வெல்லம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
*தனுசு: தனுசு ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு அரிசி, எள் தானம் செய்வது யோக பலன்களைத் தரும்.
*மகரம்: மகர சங்கராந்தியன்று மகர ராசிக்காரர்கள் கோதுமை, எள், வெல்லம் ஆகியவற்றை தானமாக அளிக்கலாம்.
*கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் வெல்லம், எள் எண்ணெய் தானம் செய்வது அதிர்ஷ்ட பலன்களைத் தரும்.
*மீனம்: மீன ராசிக்காரர்கள் எள், வெல்லம், உளுத்தம் பருப்பு தானம் செய்வது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications