சிம்மம் ராசிக்கு சவாலுக்கு மேல் சவால்.. ஆனாலும் ஒரு நல்ல தகவல்
Guru rahu ketu peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே அஷ்டமத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகியுள்ளார். ஜென்மத்தில் கேது பகவான் நுழைந்துள்ளார். இது உங்களுக்கு சற்று சவாலான வருடம் தான். ராகு பகவான் ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். குடும்ப விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது.
குடும்பம்
உங்களின் குடும்பத்தில் அந்நியர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பிறர் குடும்ப விஷயத்தில் உங்களின் தலையீடும் வேண்டாம். முடிந்தவரை வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் கணவன் - மனைவுக்கு இடையே பிரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
பணம்
பணம் கொடுக்கல் வாங்கலில் அதிகம் கவனம் தேவை. யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். யாரையும் நம்பி ஒரு காரியத்தில் இறங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலப்பிரச்னைகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். குடும்ப உறவுகளின் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும்.
குரு
பிரச்னைகள் அதிகமாக இருந்தாலும் குரு பகவானின் அமைப்புகள் சிறப்பாக உள்ளது. எனவே பயப்பட தேவையில்லை. பிரச்னைகள் அதிகமாக இருந்தாலும் அதன் தாக்கத்தை குரு ஓரளவுக்கு கட்டுப்படுத்துவார். குரு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து அவர் 3,5,7 ஆகிய இடங்களை பார்க்கிறார்.
கவனம்
இது மிகவும் நல்ல அமைப்பாகும். அடுத்த ஒரு வருடம் உத்யோகம், தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எந்த காரியத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்காமல் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.
பரிகாரம்
முதலீடுகளிலும் கவனம் வேண்டும். அகலக்கால் வைக்காமல், இருப்பதை தக்க வைப்பது புத்திசாலித்தனம். உங்கள் வீட்டு அருகில் உள்ள விநாயகர் கோயில் சென்று வழிபடலாம். மேலும், சனிக்கிழமை தினம் மதியம் உணவுடன் எலுமிச்சை ஊறுகாய் அல்லது எலுமிச்சை சாறு தானம் செய்வதால் விரயங்கள் குறைந்து நல்லது நடக்கும்.












Click it and Unblock the Notifications