கன்னி ராசிக்கு பணம் கொட்டும்.. ஆனா கூட இருப்பவர்களால்தான் ஆபத்து.. ரொம்ப ஜாக்கிரதை
Guru peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு 7 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் அச்சத்துடன் இருப்பார்கள். ஆனால், அச்சப்படத் தேவையில்லை. குரு பத்தாம் இடத்தில் இருக்கிறார். முதல் 6 மாதங்களுக்கு தொழிலில் அதீத குழப்பம் உண்டாகும். வேலையா, தொழிலா என குழப்பத்திலேயே இருப்பார்கள். 6 மாதத்துக்குப் பிறகு எந்த தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும். எது தேவை என்பதை அடுத்தடுத்து முடிவெடுத்து வெற்றி வாகை சூடுவார்கள்.
ஆரோக்கியம்
வேலை செய்யும் இடங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களே முன்னாடி ஒன்றும், பின்னாடி ஒன்றும் பேசுவார்கள். அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும். தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
புனிதப் பயணங்கள்
பிரசித்திபெற்ற கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். காசி, கயா போன்ற கோயில்களுக்குச் செல்லும் சூழல் வரும். பூர்வீக சொத்துகளை விற்க முடியாமல் தவிப்பவர்களுக்கு விற்கும் வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். வீடு, இடம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை, அந்தஸ்து அடுத்த நிலைக்கு உயரும்.
மன அழுத்தம் நீங்கும்
ராகு கேதுவால் மன அழுத்தம் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டாகும். 6 மாதங்களுக்குப் பிறகு அருமையான காலகட்டமாக இருக்கும். மன அழுத்தங்கள் நீங்கும். இதுவரை சந்தித்து வந்த பாதிப்புகள், சவால்கள் அனைத்தும் நீங்கும். லாபம், முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வழிபாடுகள்
குலதெய்வ வழிபாடு உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரும். பாதிப்புகள் அனைத்தும் பனிபோல நீங்கும். வேலை செய்யும் இடத்தின் அருகே இருக்கும் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருவது நற்பலன்களை அள்ளித் தரும்.
கவனமாக இருக்க வேண்டியவை
உத்தியோகம், வியாபாரம், தொழில் செய்பவர்கள் சக ஊழியர்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அவர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கை அவசியம்












Click it and Unblock the Notifications