ஏப்ரல் மாத பலன்: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசியினர்.. இனி உங்களை யாராலும் அடிச்சுக்க முடியாது
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலம்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப யோகமான மாதமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் 5 கிரகங்கள் கூடியிருக்கின்றன. மாதத்தின் பிற்பகுதியில் சூரியன் 12 ஆம் இடத்துக்கு மாறுகிறார். மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே படிப்படியாக நல்ல விஷயங்கள் நடக்கும் அமைப்புகள் ஏற்படும். கடந்த 6 முதல் ஓராண்டாக எந்த விஷயங்களுக்கு கஷ்டப்பட்டீர்களோ, பாதிப்புகள் ஏற்பட்டதோ அவை எல்லாம் மாறும் நிலை ஏற்படும். அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்கும்.
தொட்டது துலங்கக் கூடிய நல்ல மாதமாக இருக்கும். வேலை, தொழில், வியாபாரம், விவசாயம், நிர்வாகம் போன்ற அமைப்புகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எந்த ஒரு காரியங்களைச் செய்தாலும் அருமையாக செய்து முடிப்பீர்கள். செய்யும் வேலைகள் திருப்தியை தரும். 15 ஆம் தேதிக்கு மேல் 12 ஆம் இடத்துக்கு சூரியன் உச்சமாகி விரைய ஸ்தானத்தில் அமருகிறார். இந்த காலகட்டத்தில் வண்டி வாகனங்கள், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள், அம்மா சார்ந்த விஷயங்களில் செலவுகள் ஏற்படும்.
அம்மாவை பார்ப்பதற்காக பயணத்தை மேற்கொள்வீர்கள். வெளிமாநில, வெளிநாடு பயணம் அல்லது தூர பயணம், சிலருக்கு வடக்கு போகும் அமைப்பு, கிழக்கு நாடுகளான சிங்கப்பூர், மலேசியா போகும் அமைப்பு உண்டாகும். இந்த பயணங்களால் யோகங்கள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. தசாபுத்தி ஜாதகத்தில் நன்றாக இருந்தால் திருமண யோகம், புத்திர பாக்கியம் கைகூடி வரும்.
குரு, சுக்கிரன் பரிவர்த்தனை ஆவதால் யார் வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்பதில் தெளிவு ஏற்படும். அவரவருடைய வயதிற்கேற்ப நல்ல பலன்களைத் தரக்கூடிய யோகமான காலகட்டமாக இருக்கும். வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சட்ட போராட்டங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி ஏற்படும். மனக் கட்டுப்பாடு உண்டாகும். எந்த இடத்தில் இழப்புகளைச் சந்தித்தீர்களோ அவைகள் அத்தனையும் விலகும் தன்மை உண்டாகும்.
கலைத் திறமை, பேச்சு, எழுத்து திறமை கொண்டவர்களுக்கு இந்த மாதத்தில் பெரிய மாற்றங்கள், முட்டுக்கட்டைகள் விலகும் நல்ல மாதமாக இருக்கும். ஏற்றம், வளர்ச்சி மிக்க மாதமாக உங்களுக்கு இந்த மாதம் அமையும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications