பிப்ரவரியில் விஷ்ணுவின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர்.. செல்வம், ஆரோக்கியம், வெற்றி பெருகும்
பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் சேர்க்கை, இடப்பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறவுள்ளதால் இந்த மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஷ்ணுவின் அருளால் இந்த மாதத்தில் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் கொட்டப் போகின்றன. எந்தெந்த ராசியினர் என்று தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் சில முக்கிய கிரகங்களின் சேர்க்கை மற்றும் இடமாற்றம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, அமைதி போன்றவை கிடைக்கும். ஜாதகத்தில் கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இந்த மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவது, மந்திரத்தை உச்சரிப்பது, ஏழை எளியவர்களுக்கு உதவுவது அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் உங்களை விடுபடச் செய்யும். விஷ்ணுவின் அருளால் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம்: பிப்ரவரியில் மேஷ ராசிக்காரர்களுக்கு முதலீடு, சேமிப்புகள் மூலம் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேரும். வணிகம், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பங்குச் சந்தை, சொத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும். சமுதயாத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்து வந்த கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய முதலீடுகள் உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. இதன் மூலம் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நோய்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான காலமாக இருக்கும். வேலை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்: பிப்ரவரி மாதத்தில் விஷ்ணுவின் அருளால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வருமானத்துக்கான புதிய ஆதாரங்கள் பிறக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கடன்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். பணத்தை சேமிப்பதற்கு உகந்த காலமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் நல்ல காலமாக இருக்கும். வியாபாரம் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வியாபாரம், தொழில் தொடங்க ஏற்ற காலமாக இருக்கும். அரசுத் துறை வேலைகளுக்கு தயாராகுபவர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும்.
தனுசு: விஷ்ணுவின் அருளால் உங்ளுக்கு நிதி லாபத்துக்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். சொத்து தகராறில் இருந்து விடுபட்டு உங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். ரியல் எஸ்டேட், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சிறந்த காலமாக இருக்கும். புத்துணர்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். மிகவும் நேர்மறையான உணர்வோடு இருப்பீர்கள். பொது நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான நேரமாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். தொழில் வாழக்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிதி சார்ந்த திட்டங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதன் மூலம் லாபம் பெறுவீர்கள். கடன் வாங்குவதற்கு உகந்த நேரமாக இருக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு, பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வானிலை மாற்றத்தால் கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications