Chandra Grahan 2025: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று இரவு நடைபெறுகிறது. இந்த சந்திரகிரகணத்தால் பாதிப்புக்குள்ளாகும் 5 ராசியினர் யார், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவுக்கு புண்ணியம் கிடைக்கும்.
முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். என்ன மாதிரியான பாதிப்புகள் நடக்கும், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
சந்திர கிரகணமே பூரட்டாதி நடசத்திரத்தில் தான் நடக்கிறது. கும்ப ராசி, லக்கினக்காரர்களுக்கு அபாயமான காலகட்டம் தான். சந்திர கிரகணத்துக்குப் பிறகு தலை பாரம், தலையில் நீர்கோர்த்தல் பாதிப்பு ஏற்படும். சளி தொந்தரவு உண்டாகும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மேலதிகாரிகளாக இருப்பவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனம் தேவை. சேரக்கூடாத கிரகங்கள் என்றால் சந்திரன் ராகு என்பதால் வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கொகே சுப்பிரமணிய சுவாமியை மனதார வழிபாடு செய்வது நல்லது. இல்லையெனில் அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. வீட்டில் இருக்கும் சிவலிங்கத்துக்குப் பூஜிப்பது, அபிஷேகம் செய்வது பாதிப்புகளை போக்கும்.
துலாம்
துலாம் ராசி, லக்கினக்காரர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சந்திரகிரகணம் நன்மையைத் தராது. காய்ச்சல் வரும். சந்திரன், ராகு சேர்வதால் 6 மாதங்களுக்கு வரக்கூடிய நோய்கள் பெரிதாகும் நிலைமை உண்டாகும். நுரையீரல், இதயம் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். தவறான முறைக்கு, வழிக்கு குழந்தைகள் போவதை கண்டறிவீர்கள். சந்திரன், ராகு பஞ்சம ஸ்தானத்தில் சேரும்போது உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.
திடீரென வீடு உங்களுக்கு அமையும். இறந்து போனவர்களின் வீடு உங்களுக்கு கிடைக்கும். திடீர் பண வரவுகள் உண்டாகும். ஆனால், அதே சமயம் உங்களுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்திரன், ராகு சேரும்போது குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படும். சந்திரகிரகணத்துக்குப் பிறகான 40 நாட்கள் உங்களுக்கு நன்றாக இல்லை என்பதால் கவனமாக இருப்பது நல்லது. குலதெய்வத்தை வழிபாடு செய்து, அபிஷேகம் செய்து வழிபடுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.
மிதுனம்
மிதுன ராசி, லக்கினக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சந்திரன், ராகு சேர்க்கை நடைபெறுகிறது. இது முக்கியமாக குழந்தை பாக்கியத்தை பாதிக்கும். தெய்வ அருள் இருக்கவே இருக்காது. அடுத்த 40 நாட்களுக்கு இந்த நிலைமை தான் தொடரும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம். நிதி சார்ந்த விஷயங்களில் மிக மிக கவனமாக இருப்பது அவசியம். எம்எல்எம், பங்குச்சந்தை, சீட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வண்டி, வாகனத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரப் பயணத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் அடிக்கடி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வீண் விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணம் சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருங்கள். கெடுபலன்கள் நீங்க கலசத்தில் அரிசி தர்ப்பை, ரூ.11 சில்லரை பணம் போட்டு வயதானவர்களுக்கு தானம் செய்யுங்கள்.
மகரம்
மகர ராசி, லக்கினக்காரர்களுக்கு 2 ஆம் இடம் எனும் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ராகுவும், குருவும் சேர்ந்திருக்கின்றனர். ஏற்கனவே சொத்தையாக இருந்த பற்களை விட்டிருப்பீர்கள். இப்போது அதனால் நிறைய பற்கள் பாதிக்கப்பட்டிருக்கும். நிறைய பேருக்கு வேர் சிகிச்சை, முகத்தை மாற்றும் அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை, ஹார்மோன் சமநிலையற்ற தன்மை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
குடும்ப ஸ்தானத்தில் இந்த ராகு, சந்திரன் ஆகிய கிரகங்கள் இணைந்து கிரகணத்தைக் கொடுக்கும்போது வாழ்க்கைத் துணையின் மறைமுகமான இடங்களில் பாதிப்புகள் வரும். ருத்ரனுக்கு அபிஷேகம் செய்வது உங்களை பாதிப்பில் இருந்து காக்கும். பெரியவர்களின் பாதத்துக்கு பூஜை செய்வது கும்பத்துக்கும், மகரத்துக்கும் நல்ல பலன்களையும் பெரிய மாற்றங்களையும் தரும்.
மீனம்
மீனம் ராசி, லக்கினக்காரர்களுக்கு ரகசியமாக இருக்கும் விஷயங்கள் எல்லாம் வெளியில் வரும். பைல்ஸ், அமரும் இடத்தில் கட்டி, மறைமுக இடங்களில் பிரச்சனைகள், சாக்கடை, கழிவறை பிரச்சனை போன்றவை உண்டாகும். சிலருக்கு அறுவை சிகிச்சை, பாட்டி, அத்தை, போன்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் உண்டாகும். சிலருக்கு இடமாற்றத்தால் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு உள்ளது.
அரபு நாடு, மலேசியாவில் வசிப்பவர்களுக்கு நிறைய விரையங்கள் செய்வதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு நிறைய செலவுகள் ஏற்படும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். இதில் எதைச் செய்ய வேண்டும் என்பதை நிதானமாக சிந்தித்து செயல்படுவது நன்மை பயக்கும். எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.
மன சங்கடங்கள் கொடுக்கும் விஷயங்கள் நடக்கும். விரைய ஸ்தானத்தில் இருக்கும்போது தான் நாம் இடமாறியதே தவறு என்பது புரியும். மன ரீதியாக ரொம்ப சிரமத்தை சந்திப்பீர்கள். இந்த மாதிரி சமயங்களில் 9 முறை மூச்சை இழுத்து விடுவது நல்து. மூச்சை உள் இழுக்கும்போது உங்கள் கஷ்டங்களையும், வெளியில் மூச்சை விடும்போது கஷ்டங்கள் பஷ்பமாவது போன்று நினைத்துக் கொள்வது நல்லது. சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது ஏற்றத்தை கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications