Chandra Grahan 2025: மிதுன ராசிக்கு சுத்து போடும் கிரகணம்.. 40 நாட்களுக்கு ரெட் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. இந்த சந்திரகிரகணத்தால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

lunar-eclipse-2025-what-kind-of-benefit-mithunam-rasi-gemini-people-will-get-duing-this-period

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவு புண்ணியம் கிடைக்கும்.

5 ராசியினர் கவனம்

முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.

யோகமான ராசி

இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.

இந்த சந்திரகிரகணத்தால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசி, லக்ன மக்களுக்கு பாக்யஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் சந்திரன், ராகு சேர்க்கை நடைபெறுகிறது. இதை கிரகண தோசம் என்பார்கள். இது முக்கியமாக குழந்தை பாக்கியத்தை பாதிக்கும். பொதுவாக பாக்யம் என்பது தெய்வ அணுகிரகத்தை குறிக்கும். இந்த அணுகிரகம் அடியோடு பாதிக்கப்படும். தெய்வ அருள் இருக்கவே இருக்காது.

40 நாட்களுக்கு கவனம்

அடுத்த 40 நாட்களுக்கு இந்த நிலைமை தான் தொடரும். மிதுனத்தில் பிறந்தவர்கள் வீட்டில் அப்பா அம்மா இருவரையும் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம். நிதி சார்ந்த விஷயங்களில் மிக மிக கவனமாக இருப்பது அவசியம்.

நிதியில் எச்சரிக்கை

எம்எல்எம், பங்குச்சந்தை, சீட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். மோசடி பேர்வழிகள் உங்களை தேடி வருவார்கள். யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். சட்டவிரோத செயல்களில் இருப்போரின் நிழலை கூட சீண்டாமல் ஒதுங்கியே இருங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்களையும் நீங்கள் தான் கவனமாக கண்காணித்து வழிநடத்த வேண்டும்.

கணவன் - மனைவி உறவு

சைபர் மோசடிகளும் அதிகளவு நடைபெற வாய்ப்புள்ளது. வண்டி, வாகனத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வித்தைகள், வேகம் ஆகியவற்றை கட்டுப்படுத்தி பொறுமையாக செல்ல வேண்டும். இரவு நேரப் பயணத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவில் அடிக்கடி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

பரிகாரம்

வீண் விரயம் ஏற்படுதற்கான வாய்ப்புள்ளது. எனவே பணம் சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருங்கள். எந்தக் காரணத்துக்காகவும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். கெடுபலன்கள் நீங்க கலசத்தில் அரிசி தர்ப்பை, ரூ.11 சில்லரை பணம் போட்டு வயதானவர்களுக்கு தானம் செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+