Lunar Eclipse 2025: சந்திரகிரகணத்தன்று செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை? பரிகார நட்சத்திரத்தினர் யார்?
சந்திர கிரகணம் 2025: 2025 ஆம் ஆண்டில் செட்பம்பர் 7 ஆம் தேதியான நாளை சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. சந்திரகிரகணம் எப்போது தொடங்குகிறது, நிறைவடைகிறது, என்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நேரம், பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரத்தினர் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சந்திர கிரகணம் நேரம்
2025 ஆம் ஆண்டு வரும் பெளர்ணமி தினத்தன்று செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. பெளர்ணமியில் வரக்கூடியது சந்திர கிரகணம். அமாவாசையில் வரக்கூடியது சூரியகிரகணம். ஆவணி மாதத்தில் வரும் இந்த சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 9.54 மணிக்கு ஆரம்பித்து செப்டம்பர் 8 ஆம் தேதி விடியற்காலை 1.26 மணிக்கு முடிகிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 11.41 சந்திர கிரகணம் மத்தியத்தில் உள்ளது. இந்த காலகட்டத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம் உள்ளது.
கிரகண காலத்தில் சாப்பிடலாமா?
இரவு 9.54 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பிக்கவுள்ளதால் 4 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடித்துவிடுவது நல்லது. கிரகண காலத்தில் வயிற்றில் எந்தவகை உணவும் இல்லாமல் இருப்பது நல்லது. அவ்வாறு உணவு வயிற்றில் இருந்தால் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. புழுக்களாகவும், பூச்சிகளாகவும் வயிற்றில் இருக்கும் உணவு மாறும். இது அறிவியல் பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால் தான் நம் முன்னோர்கள் சாஸ்திர ரீதியாக கிரகண காலத்தில் வயிறு காலியாக இருக்க வேண்டும் என்றும், தண்ணீர் கூட குடிக்கக் கூடாது என்று சொல்லி வைத்துள்ளனர். வயிறு காலியாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் இருக்கும் உணவு விஷத் தன்மை பெறாமல் பாதுகாக்கப்படும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் இது விதிவிலக்கு.
தர்ப்பை புல்லை பயன்படுத்தும் முறை
உப்பு, ஊறுகாய், பால், தயிர் போன்றவற்றில் தர்ப்பை புற்களை போட்டு வைப்பது நல்லது. கிரகண காலத்தில் வரும் கதிர்களின் தாக்கம் கிருமிகளை உண்டாக்கும் தன்மையை அதிகரிக்கும். அதனால், வீட்டின் வாசற்படியே தர்ப்பை புற்களை வைப்பது நல்லது. கிரகணம் ஆரம்பிக்கும் அரை மணி நேரத்திற்கு முன்பே வீட்டின் நுழைவாயில், கதவு தாழ்பால், சுவாமி அறை, ஊறுகாய் ஜாடி, குடிக்கும் தண்ணீர் போன்றவற்றில் தர்ப்பை புற்களை போட்டு வைப்பது நல்லது.
சந்திர கிரகணத்தன்று உணவு, பால், தயிர் போன்றவற்றை மீதம் வைக்காமல் இருப்பது நல்லது. இந்த தர்ப்பை புற்களை பொருள்களின் மேல் போட்டு வைப்பதால் எதிர்மறையான விஷயங்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்படும். மேலும், சந்திர கிரகணத்தன்று வரும் கதிர்கள் எதுவும் நம் இல்லத்தின் மேல் படும்போது அந்த பொருள்களில் விஷத் தன்மையுடையதாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த தர்ப்பை புற்களை வைப்பதன் மூலம் அவை தடுக்கப்படும்.
பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரத்தினர்
சந்திர கிரகணத்தன்று சதயம் நட்சத்திரத்தில் கும்ப ராசியில் ராகு பகவான், சந்திரன் இருக்கிறார். எனவே, சதயம் நட்சத்திரத்தினர் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும். சந்திரனும், ராகுவும் கும்பத்திலும், சூரியனும், கேதுவும் சிம்ம ராசியில் இருக்கும் இந்த கிரகண காலத்தில் சதயம், திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.
இந்த நட்சத்திரக்காரர்கள் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலையில் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து கொள்வது நல்லது. நெல் அல்லது பச்சரியுடன் ஒரு மட்டை தேங்காய், வெத்தலை, பழம், பாக்கு, தேங்காய் போன்றவற்றை அர்ச்சகருக்கு தானம் கொடுப்பது நன்மை பயக்கும். அஸ்வினி, மூலம், மகம், அவிட்டம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களும் சுவாமியை வழிபட்டு பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
கிரகணம் முடிந்து செய்ய வேண்டியவை
- செப்டம்பர் 8 ஆம் தேதி விடியற்காலை 2 மணியளவில் சந்திர கிரகணம் பூரணமாக முடிகிறது. விடியற்காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளிக்க வேண்டும்.
- வீட்டில் வைத்திருக்கும் தர்ப்பைகளை குப்பையில் போட்டுவிட்டு சமையல் அறையை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
- சுவாமி அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
- சுவாமி வழிபாட்டை முடித்துவிட்டுதான் பால் காயவைத்து டீ, காபி போன்றவற்றை குடிக்க வேண்டும்.
- சமையல் அறையை கழுவி துடைக்காமல் சமைக்க கூடாது.
- செப்டம்பர் 7 ஆம் தேதி 11.41 மத்தியம காலம். இந்த மத்தியம காலத்தில் இரவு 11 மணி முதல் 12 மணி வரை சுவாமி வழிபாடு செய்வது, சுவாமி மந்திரங்களை ஜெபிப்பது நன்மை பயக்கும்.
இந்த கிரகணம் மிகவும் வீரியமான கிரகணமாகும். சூரியன் தன்னுடைய சொந்த வீட்டில் இருக்கிறார். கேதுவும் சூரியனுடன் சேர்ந்திருக்கிறார். இதுபோன்ற கிரகணம் ஒரு சில வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும். அதனால், அதிக வீரியத் தன்மை கொண்டதாக இந்த கிரகணம் இருக்கும். அதிக நேரமும் இந்த கிரகணம் இருப்பதால் மிகவும் நல்லது கிடையாது. இயற்கை சீற்றங்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications