மகர ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் சனி, குரு.. தொட்டதெல்லாம் ஹிட்டு.. பண விஷயத்தில் கவனம் கவனம்
Guru rahu ketu peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகர ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி சுமாராகத்தான் இருக்கும். ஆனால் சனி பகவான் ஏழரை சனி விலகியுள்ளதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். குரு பகவான் ஆறாம் இடத்துக்கு வருவதால் புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். விரையம் கூட உங்களுக்கு லாபமாக அமையும். நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட நடப்பதற்கான யோகம் உண்டாகும். யாரும் சாதிக்க முடியாத விஷயங்களை நீங்கள் சாதித்து மகிழ்வீர்கள்.
ஆரோக்கியம்
உடல் பருமன் பிரச்சனை, ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக கவனிக்க முடியாத பிரச்சனைகள், டான்சில் பிரச்சனைகள் வரும். கழுத்து, மூட்டு பிரச்சனைகள் வரும். பிறர் குடும்பத்தில் உங்கள் தலையீடு, உங்கள் குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. மூன்றாவது நபர்கள் தலையிட்டால் பெரிய பாதிப்பை சந்திப்பீர்கள்.
பண விஷயத்தில் கவனம்
முதலீடு, பணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மனைவியிடமோ, கணவரிடமோ பேசும்போது மிகுந்த கவனம் தேவை. கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கும் நிலைமை உண்டாகும். வேலையா, தொழிலா என்ற குழப்பம் வந்தால் வேலையைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம். தொழில் கிடைத்தாலும் ஜாக்பாட் யோகம் உண்டாகும்.
பதவி உயர்வு
மகர ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு வருவதால் வரப்பிரசாதமாக இருக்கும். பிரிந்த குடும்பத்தினர் ஒன்று சேர்வார்கள். குழந்தைகள் மூலமாக மிகப்பெரிய பெருமைகள் உண்டாகும். வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். கேட்கக்கூடிய இடத்தில் வேலை கிடைக்கும். ரெஃபரன்ஸ் மூலமாக வேலையில் சாதிப்பார்கள். பண வரவு அதிகரிக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். முதலீடு விஷயங்களில், சிட் பண்ட் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பேராசையைத் தவிர்த்தல் நல்லது. இல்லையெனில் ஆபத்தாக முடியக்கூடிய சூழல் உண்டாகும். ஐயப்ப சுவாமி வழிபாடு மிகுந்த நல்ல பலன்களைத் தரும். வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வது அற்புதமான பலன்களை அள்ளித் தரும் காலகட்டமாக இருக்கும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications