Rasi Palan This Week: மகர ராசியை சுத்துப் போடும் கிரகங்கள்.. ரொம்ப ரொம்ப கவனம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி 9 முதல் ஆவணி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு போன்ற விஷயங்களில் அனுகூலம் காணப்படும். தேவையில்லாத பதட்டங்களையும், அவசரத்தையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒரு முறைக்கு இருமுறை படித்து விட்டு போடுவது நல்லது. தொழிலில் இருந்து சிக்கல்கள் தீரும். ஆனால், பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
அனுகூலம்
உத்தியோகத்தில் அற்புதமான காலகட்டம். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும். மேலதிகாரிகள் தேவையில்லாத குறைகளை உங்கள் மீது சுமத்துவதற்கான வாய்ப்புள்ளது. பேப்பர் போடுவது, தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. மகர ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் கேதுவுடன் சூரியன் இருப்பதால் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது நல்லது.
குரங்கு பொம்மை
மூன்று குரங்கு பொம்மைகள் போல வாய், காது, கண்களை மூடி வைத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பாதிப்புகளையும், பெரிய பிரச்சனைகளையும் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ரத்த அழுத்தம், மயக்கம் போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
வாகனத்தில் செல்லும்போது வித்தைகளைத் தவிர்ப்பது நல்லது. கூடா நட்பால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசுத் துறை, அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும். மாற்றங்களும், ஏற்றங்களும் நிறைந்த காலகட்டமாக இருந்தாலும் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் கவனமாக செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும்.
வழிபாடு
பெருமாள் தாயார், ஆஞ்சநேயர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது பெரிய நம்பிக்கையையும், பலத்தையும் உங்களுக்கு கொடுக்கும். விஷ்ணு காயத்ரியை கேட்பது, சொல்லி வருவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications