Rasi Palan This Week: மகர ராசிக்கு 45 நாட்களில் நடக்கும் பிரகாசமான மாற்றம்.. தொட்டது துலங்கும்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அமோகமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய தொழில், புதிய உத்தியோகம், சுப காரியங்கள், திருமணத் தடை, புத்திர சந்தானத் தடை, தொழில் தடை, வியாபாரத் தடை என அனைத்து தடைகளும் நீங்கும். வண்டி, வாகனங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
குடும்பம்
கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் இணக்கமாக, அன்பாக இருப்பது நல்லது. தேவையில்லாத சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். பயணங்களின் போது ஆணாக இருந்தால் பெண்கள் விஷயங்களிலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனத்தோடு இருப்பது நன்மை பயக்கும்.
தடைகள் நீங்கும்
இதுவரை நீங்கள் செய்யத் தொடங்கும் காரியங்களில் ஏதாவதொரு விதமான தடைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அதுபோன்ற இழுபறியான நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும். மிகுந்த நம்பிக்கையும் ஏற்றமும் ஏற்படும். தொழிலில் மாற்றம், வியாபாரத்தில் மாற்றம், உத்தியோகத்தில் மாற்றம், படிப்பில் மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படும்.
சம்பள உயர்வு
சம்பள உயர்வு, பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நீண்ட நாட்களாக வேலை இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, குறிப்பாக கடல் கடந்து சென்றுவிட்டு வேலையை இழந்து, அவமானப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனி நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
45 நாளில் நன்மை
வரும் 45 நாட்களுக்குள் நன்மைகள் பெறும் அளவுக்கு கிரக சஞ்சாரங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். தூக்கம் இல்லாமல் இருக்கும் சூழல் ஏற்படும். ஏதேதோ தேவையில்லா கற்பனைகள் வரும். கூட இருப்பவர்களுக்கெல்லாம் கெட்டது நடப்பது போன்ற தோன்றும் நிலை ஏற்படும்.
வழிபாடு
அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று சிதறு தேங்காய் உடைத்துவிட்டு, வீட்டுக்கு வந்து குளித்துவிடுவது நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். விநாயகர், துர்க்கை வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications