Magaram Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் மகர ராசி.. சொத்துகளைக் குவிக்கும் யோகம்
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு இந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே லாபாதிபதி செவ்வாய் ராசியில் அமர்ந்திருக்கிறார் என்பதால் மிகப்பெரிய மேன்மைகள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் சொத்து வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குடியிருப்பதற்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. செவ்வாய் பாதகாதிபதி என்பதால் சிலர் அதிகளவில் பணம் கொடுத்து சொத்துகளை வாங்குவீர்கள்.
சொத்துகள் வாங்கும் யோகம்
பாதக ஸ்தானாதிபதி செவ்வாயாக இருப்பதால் சொத்துகள் நிச்சயமாக கிடைக்கும். ஆனால், அதற்காக அதிகளவில் செலவு செய்யக்கூடிய அமைப்பு ஏற்படும். படிக்கக் கூடிய மாணவர்களுக்கு படிப்புக்கு நிறைய கடின உழைப்பை போடுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். ஆனால், கடின உழைப்பை போட வேண்டியதிருக்கும்.
கவனம்
மகர ராசியைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் ஓய்வெடுக்கிறார்களா, சாப்பிடுகிறார்களா, படிக்கிறார்களா என பார்த்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதியை, உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ளும் சூழல் வரும். அதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. அப்பாவுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
திருமண யோகம்
நெருப்பினால், மின்சாரத்தால் பாதிக்கப்படக் கூடிய சூழல் ஏற்படும். காதல் விஷயங்கள், திருமணம் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் கைகூடும். புதிய காதல் மலரும். திருமணம் உறுதியாகும் வாய்ப்பு ஏற்படும். நிறைய பேருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இந்த மாதத்தில் நிறைய புலம்பக்கூடிய சூழல் ஏற்படும். வீட்டில் உள்ள குறைபாடுகள், உங்களுடைய எதிர்பார்ப்புகள் குறித்து பேசுவீர்கள். பேசிக் கொண்டே இருக்கும் சூழல் ஏற்படும்.
வழிபாடு
இந்த மாதத்தில் ஆர்டிஃபீசியல் இன்டெலிஜன்ஸ் சம்பந்தப்பட்ட படிப்பு, கம்யூனிகேஷன் படிப்பு, புதிய கோர்ஸ்களை கற்றுக் கொள்வதற்கான யோகம் உண்டாகும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் மாதமாக இருக்கும். தொழில் ரீதியாக அதிக வருமானம் கிடைக்கும். நிறைந்த வெற்றிகளைக் கிடைக்க திருச்செந்தூர் முருகன் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தைத் தரும்.
-
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications