Rasi Palan This Week: மகர ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டும்
Magaram Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகர ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை, அசாத்தியமான வலிமை, செயலாக்கம், திட்டங்களை வெற்றி பெறச் செய்வது என்று கொடிகட்டிப் பறக்கும் யோகம் உண்டாகும். அரசியல் தலைவர்களுக்கு மிகப்பெரிய யோகம் கிடைக்கும். வீடு வாங்கும், நிலம் வாங்கும் நல்ல நேரம் உள்ளது.
முயற்சிகளில் வெற்றி
நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். அதிகாரம் கையில் கிடைக்கும். நிறைய பேர் தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். மன வருத்தங்கள் பரிபூரணமாக நீங்கும். எதுவாக இருந்தாலும் நம்மால் செய்ய முடியும் என்கிற எண்ணம் ஏற்படும்.
தைரியம்
ஒரு விஷயத்தை நின்று செய்து முடிக்கக்கூடிய தைரியம் ஏற்படும். செவ்வாய் ராஜகிரகம் அமரும்வரை சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஏதாவதொரு வேலையை செய்து கொண்டே இருப்பீர்கள். மருமகன், மருமகள், பிள்ளைகள் என எல்லோரும் உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள். மகரத்திற்கு அற்புதமான காலகட்டம். எந்த காரியத்தை திட்டமிட்டாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
கவனம்
எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத குழப்பம், சங்கடங்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது ஏற்றத்தைத் தரும். மேலதிகாரிகளிடம், சக ஊழியர்களிடம் தர்க்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வேலையை விட்டு விடுவதற்கு முன்னாள் வீட்டில் பெரியவர்களுடன் ஆலோசித்துவிட்டுச் செய்வது நல்லது.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடித்தாலும் மனதில் இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கும். சர்ப்ப கிரகங்கள் 2, 8 இல் இருப்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பெரும் சந்தோஷமும், அனுகூலமும் உண்டாகும். எல்லா விதத்திலும் அனுகூலம் இருந்தாலும் கோபத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது முன்னேற்றத்தைத் தரும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நாமக்கல் ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். அனுமன் வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது ஏற்றத்தை தரும். பெண்களுக்கு வெற்றியைக் கொடுக்கக் கூடிய வாரமாக இருக்கும். ஆண்கள் விட்டுக் கொடுக்கக் கூடிய வாரமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications