மகர ராசியினரே வீடு, நிலம் வாங்கப் போறீங்களா ஜாக்கிரதை.. பேச்சு, கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது
சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி வக்கிரம்
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

காயத்ரி மந்திரம்
சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.
இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசி பலன்
உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது மகர ராசி. ராசியின் அதிபதி சனி பகவான். உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். பாத சனி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது 2 ஆம் இடத்திலேயே சனி வக்கிரகதி அடைகிறார். ஜூலை 2 முதல் நவம்பர் 17 வரையிலான இந்த காலகட்டத்தில் சனி வக்கிரமடைந்தாலும், குருவின் பார்வை இருப்பதால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பேச்சில் கவனம்
பேச்சில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். பண வரவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் முதல் ஒன்றரை மாதத்தில் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்படும். போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இரண்டாவது ஒன்றரை மாதத்தில் உங்களுக்கு பதவி, புகழ், அந்தஸ்துகள் கிடைக்கும்.
தடைகள்
குழந்தைகள் மூலமாக சிறு சிறு தொந்தரவுகள் வந்து போகும். உங்களுடைய ராசிக்கு மூன்றாவது ஒன்றரை மாதமான அக்டோபர் நவம்பர் காலகட்டத்தில் இடப்பெயர்ச்சிகள் உண்டாகும். இடம் வாங்குவதில் தடைகள் வந்து போகும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். சுகங்கள் கெடக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
பேச்சில் கவனம்
பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. வாக்குகுறுதிகள், உறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. கீழ்தட்டு மக்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள், எதிர்பாலினத்தவரால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வேலைவாய்ப்பு
புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலை விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். சனி வக்ர பெயர்ச்சியின்போது ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய கடன்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு அதில் இருந்து விடுதலை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்புண்டு.
தொழில்
புதிய வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. நிலம், இடம் வாங்குவதில் பின்னடைவு ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் வந்து போகும். தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அபரிமிதமான லாபங்கள் கிடைக்கும்.
வழிபாடு, பரிகாரம்
இடும்பவனத்திற்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வருவது பாதிப்புகளை நிவர்த்தி செய்யும். சதுர்த்தி தினத்தன்று விநாயகர் கோயில்களில் தேங்காய் உடைத்து வழிபடுவது அற்புதமான மாற்றங்களைத் தரும். பாண்டிச்சேரி அருகே வேதாரண்யம் செல்லும் வழியில் உள்ள சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நன்மையை ஏற்படுத்தும்
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications