தீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க
இந்த மைத்ரமுகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறு தொகையை கட்ட தொடங்கினாலே போதும் விரைவில் கடனை தீர்க்கும் வளம் பெற்று விடுவீர்கள். கடன் சுமையை தீர்த்து வைக்கும் மைத்ரேய முகூர்த்தம் இன்று மாலை வருகிறது.
சென்னை: நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது. இன்று மைத்ரேய முகூர்த்தம் வருகிறது. மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.
இருக்கிற கடனையெல்லாம் அடைச்சிட்டு நிம்மதியா இருக்கணும் என்று பலரும் நினைக்கின்றனர். மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ரேய முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது. ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும். செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது. வெள்ளிக்கிழமை அனுஷம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் சேருகின்றன நேரம் மைத்ரேய முகூர்த்தமாகும்.

கடன் கண்டிப்பாக தீரும்
இந்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும். நமக்கு சிரமம் இல்லாமலேயே .என்னதான் கால நேரங்கள் நமக்கு உறுதுணையாக இருந்தாலும், சரியான திட்டமிடலும், கடின உழைப்பும் இருந்தால் சகல செல்வங்களையும், சிறப்புகளையும் பெற்று வாழலாம்.

மைத்ர முகூர்த்தம்
எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் நேரம்தான் மைத்ர முகூர்த்தம். நீங்கள் பெருந்தொகையாகத் தரவேண்டிய கடன் தொகையில், கொஞ்சமேனும் குறிப்பிட்ட இந்த நாளில், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பிக் கொடுங்கள். எவ்வளவு பெரும் தொகையானாலும், சிறுக சிறுக அடைபட்டுவிடும் என்பது உறுதி.

மைத்ர முகூர்த்த நேரங்கள்
- ஜூன் 5, 2020 வெள்ளிக்கிழமை மாலை 4.24 மணி முதல் 6.24 மணி வரை
- ஜூன் 16 2020 செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை
- ஜூலை 7,2020 வியாழக்கிழமை மாலை 03.05 மணி முதல் 05.05 மணி வரை
- ஜூலை 13,2020 திங்கட்கிழமை மாலை 03.05 மணி முதல் 05.05 மணி வரை
- ஜூலை 18,2020 சனிக்கிழமை காலை 06.08 மணி முதல் 08.08 மணி வரை
- மதியம் 12.08 மணி முதல் 02.08 மணி வரை மாலை 06.08 மணி முதல் 08.08 மணிவரை
- ஜூலை 29,2020 புதன்கிழமை மதியம் 01.52 மணி முதல் 03.52 மணி வரை

கடன் யாருக்கு வரும்
ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.

கடன் பிரச்சினை யாருக்கு
ஜாதகப்படி லக்னாதிபதி 6ஆம் இடத்தில் பகை பெற்றோ தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து தசாபுத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு வழக்கு கடன் தொல்லைகள் ஏற்படும். லக்னாதிபதி 6ஆம் வீட்டிலும் 6ஆம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்.

கடன் வாங்க கூடாத காலங்கள்
குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும் போது கடன் வாங்க கூடாது. எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார். குரு ராகு, கேது கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்யக் கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது.

கடன்கள் அடைபடும்
கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிப்பவர்கள் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து,அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு. கடன் கொடுத்தவர், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க மறுக்கிறார் எனில், சிறு சிறு தொகையாக நமது வங்கிக் கணக்கில் சேர்த்து சேமித்து, பிறகு மொத்தமாக அடைக்கலாம். அப்படி, மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும் பட்சத்தில் வெகு சீக்கிரத்தில் பணம் சேர்ந்து, மொத்த கடனும் அடைபடும்.

வீண் செலவு வேண்டாம்
கடன் உள்ள காலங்களில் இறைவழிபாட்டிற்காக பொருட்செலவு செய்தல், பணம் செலவு செய்தால் கூடாது. இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கி கற்பூரம் கூட ஏற்றக்கூடாது. இறைவனை மனதால் துதித்தலே அதிக பலனை தரும். லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்தல் நன்று எக்காரணம் கொண்டும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளவர்கள் அதிக செலவாகும் ஹோமங்களை செய்யவேண்டாம். சாதாரண வழிபாடே போதுமானது. மைத்ர முகூர்த்தம் நாட்களில் கடன் திருப்பி தந்து முழுகடனும் நீங்கி நல்அமைதியான வாழ்வு வாழ இறைவன் அருளட்டும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications