Makaram Rasi Palan: வாரே.. வா.. மகரம் ராசிக்கு அடிக்குது அதிர்ஷ்ட காற்று
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். பல விஷயங்களில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். ஏழரை சனி விலகிவிட்டது. சனி பகவான் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். மாத தொடக்கத்திலேயே உங்கள் ராசியை சுக்கிரன் பார்க்கிறார். இரண்டாம் இடத்தில் ராகு உள்ளார். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ராகு குரு பார்வையில் உள்ளதால் நல்ல பலன்களே கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்த தடைகள் விலகும்.
தசம அங்காரஹா யோகம்
ஏழரை சனியால் கடந்த 7 வருடங்களுக்கு மேல் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். இனி உங்களுக்கு படிப்படியாக நல்ல பலன்கள் உண்டாகும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீச தொடங்கும். செப்டம்பர் 15 ஆம் தேதி சூரிய பகவான் எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் பாக்கியாதிபதி புதன் வலிமையாக இருக்கிறார். செவ்வாய் பத்தாம் இடத்தில் இருந்து கொண்டு தசம அங்காரஹா என்ற பலனை கொடுக்க போகிறார்.
பாக்கியாதிபதி உச்சம்
45 நாட்களுக்கு அவர் அந்த பலனை கொடுப்பார். இதன் மூலம் உத்யோகம், தொழிலில் உயர்வு காணப்படும். உத்யோகம், தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். பாக்கியாதிபதி உச்சத்தில் இருப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும். புதனும் சுமார் 20 நாட்கள் உச்சத்தில் இருப்பார். அதனால் பொருளாதாரம் உயர்வடையும். மற்றபடி பெரியளவு எந்த சிக்கல்களும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வரும்.
உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
இந்த விஷயங்களில் கவனம்
12 ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் வீண் விரயம் , வீண் செலவுகள் அதிகரிக்கும். பெண் வழி உறவுகள், வாழ்க்கை துணை, காதல் உறவு ஆகியோரால் செலவுகள் இருக்கும். பிற மொழி சார்ந்த மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கை அவசியம். சில நண்பர்கள் பகைவர்களாக மாற வாய்ப்புள்ளது. தொழிலில் இருப்போர் உங்கள் ஊழியர்களை பெரிதாக நம்ப கூடாது. அனைத்து விஷயங்களிலும் உங்களின் கண்காணிப்பு முக்கியம்.












Click it and Unblock the Notifications