புதனின் நீச்சத்தால் கன்னி ராசிக்கு எச்சரிக்கை.. ஏமாற்றம், உறவுகளைப் பிரியும் ஆபத்து
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் கன்னி ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் கன்னி ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் நீச்சத்தை அடைந்தாலும், நீச்சபங்க ராஜயோக அமைப்பில் ராசியைப் பார்க்கிறார். ராசியை 3 கிரகம் வலுத்துப் பார்க்கிறது. 15 ஆம் தேதிக்குப் பிறகு 4 கிரகம் வலுத்துப் பார்க்கிறது. ராசியிலேயே ஒரு கிரகம் உள்ளது. 5, 6 கிரகங்கள் ராசியோடு தொடர்பு கொள்ளக்கூடிய சூழலில் சுபராகிய சுக்கிரனும் அங்கு உச்சத்தை அடைவதால் பெருத்த சோதனைகள் சந்திக்காத நல்ல தன்மைகள் உங்களுக்கு இருக்கும்.
ராசிநாதன் 3 மாதம் வரை தொடர்ந்து ஒரு மாதிரியான நீச்சமடைந்து காணப்படுவார். ஆனால், அங்கு சுக்கிரனும் வக்கிரமாக இருப்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது. நண்பர்களால் ஏமாற்றம், மனைவி, கணவன் உறவுகளால் ஏமாற்றமான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவி, நட்பை பிரிய வைப்பதற்கான சூழல் ஏற்படும். மனதுக்குப் பிடித்த விஷயங்கள் உங்கள் காலை வாரக்கூடும். மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை இந்த காலகட்டம் இருக்கும்.
6 இல் இருக்கும் சனி 7 ஆம் இடத்துப் போவதால் நீங்களே கொஞ்சம் பிடிவாத குணத்துடன் இருக்கக் கூடியவர்களாக மாறுவீர்கள். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். அகல கால் வைக்காமல் இருப்பது நல்லது. யாரையும் 3 மாதங்களுக்கு நம்பக் கூடாது. அடுத்தடுத்து வரக்கூடிய அமைப்புகளில் புதனும், சுக்கிரனும் ராகுவோடு சேர்ந்து நீச்சமாக இருப்பதால் நீச்சமான சூழல் ஏற்படும்.
தெளிவான முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்படும். வேலை ஆட்களை நம்பாமல் இருப்பது நல்லது. தெரியாதவர்களிடம் நன்றாக பழகாதீர்கள். விலகி இருப்பது நல்லது. பெண்கள் ஆண்களை நம்பாமல் இருப்பது நல்லது. எந்தவொரு நிலையிலும் கவனமாக இருக்கும் காலகட்டமாக இந்த மார்ச் மாதம் உங்களுக்கு இருக்கும்.












Click it and Unblock the Notifications