மார்ச் மாத பலன்: சிகரத்தை தொடும் மகரம்.. விட்டு விலகும் ஏழரை சனியால் கொட்டும் அதிர்ஷ்டம்
மார்ச் மாத பலன்: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் மகர ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் மகர ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு அதிகம் நன்மை தரக்கூடிய யோக மாதமாக இருக்கும். ராசிநாதன் வலுவாக இருக்கிறார். ஏழரை சனி முடிந்து மூன்றாம் இடத்துக்கு போகப் போகிறார். முதல் 15 நாட்களுக்கு மட்டுமே சூரியனோடு சேர்ந்திருப்பதால் பண வரவு குறைவாக இருக்கும். ஏழரை சனி 29 ஆம் தேதியுடன் முழுவதுமாக முடிவடைவதால் நிம்மதி அடைவீர்கள்.
கடந்த 6 வருடங்களாக குடும்பம், ஆரோக்கியம், வேலை, தொழில், கடன், சகஜமாக பழகுவது, மன அழுத்தம், உடல்நிலை போன்ற அனைத்து விஷயங்களிலும் தோல்வியை சந்தித்து வந்திருப்பீர்கள். உங்களுக்கு படிப்படியான முன்னேற்றங்கள் உண்டாகும். முகத்தில் தேஜஸ் வரும். அனைத்து விதமான பிரச்சனைகள், சவால்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். இனி உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். கம்பீரமாக, தைரியமாக இருக்கக்கூடிய மாதமாக இருக்கும்.
ஏழரை சனியில் இருந்து விடுபட்டு கம்பீரமாக இருப்பீர்கள். மகர ராசிக்காரர்களுக்கு நல்ல தசாபுத்தி அமைந்திருந்தால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க கூடிய தொடர்புகள் ஏற்படுவதற்கான நல்ல மாதமாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் துணையாக இருப்பார்கள். காதல் உருவாகும். பிரிந்த காதலர்கள் இணைவார்கள். புதிய காதல் ஏற்படும்.
புதிய வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டு. நினைத்த வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். அரசு வேலையில் முன்னேற்றமில்லாமல் இருந்தவர்களுக்கு இனி சாதகமான காலமாக இருக்கும். ஏழரை சனி முடிவதால் யோகமான காலமாக இருக்கும். நல்ல அமைப்பிருப்பதால் இந்த காலகட்டத்தில் சரியான முயற்சி மேற்கொண்டால் அதில் வெற்றி காண்பீர்கள்.
உழைப்புக்கேற்ற லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். வயதுக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். எந்த விஷயங்களில் எல்லாம் பாதித்தீர்களோ அந்த விஷயங்களில் எல்லாம் இனி விடுதலை பெற்று சுகம் பெறும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும்.












Click it and Unblock the Notifications