ரிஷபத்துக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும் காலம்.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் ரிஷப ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் ரிஷப ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சுக்கிரனும், குருவும் பரிவர்த்தனை அடைந்திருக்கக் கூடிய யோகமான, நல்ல காலமாக இருக்கும். ராசிநாதன் உச்சத்தோடு பரிவர்த்தனை அடைந்துள்ளதால் மனதில் புதிய தெளிவு ஏற்படும். தெளிவான முடிவுகளை மேற்கொள்வீர்கள். யார் நல்லவர், யார் கெட்டவர், எது நல்லது, எது கெட்டது, எது தேவை, எது தேவை இல்லை என்பது குறித்து தெளிவான முடிவெடுப்பீர்கள். தீமையானவற்றை தள்ளி வைப்பீர்கள்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை சரியாக செய்ய வேண்டிய அமைப்புள்ள சுப அமைப்பாக இருக்கும். 2, 11 ஆம் இடம் வலுத்திருப்பதால் வெற்றிகள் கிடைக்கக்கூடிய அமைப்பு இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மிகப்பெரிய அளவில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். எல்லாவற்றிலும் வெற்றிகள் கிடைக்கக்கூடிய தன்மை கிடைக்கும். 7, 5, 9 சுபத்துவத்தை அடைந்துள்ளதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஏற்கனவே பிறந்திருக்கிற குழந்தைக்கு ஏதாவது குறைகள் இருந்தால் அவை தீர்ந்து உங்களுக்கு சந்தோஷமான காலமாக இருக்கும்.
பெரியளவில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை. 2 ஆம் அதிபதி நீச்சத்தை அடைந்திருந்தாலும் உங்களுக்குப் பிரச்சனை இல்லை. அந்நிய இன, மத, மொழி பேசக்கூடியவர்களால் நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல வரவு உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம், அரபு நாடுகளில் இருந்து பணம் வரும். நல்ல செய்திகள் வந்து சேரும். எல்லா விஷயத்திலும் சாதகமான தன்மைகள் உங்களுக்கு இருப்பதால் சிறப்பான வாழ்க்கை வாழ்வீர்கள். ராசி நாதன் உச்சத்தை அடைந்துள்ளதால் பிரச்சனைகளை தைரியத்தோடு சமாளிப்பீர்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications