Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஷ்டம சனியிலும் சொல்லி அடிக்கும் சிம்மம்.. பணம், வீடு, பொன் யோகம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் சிம்ம ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

March month rasi palan simmam sani peyarchi

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் சிம்ம ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நல்ல பலன்கள் கண்டிப்பாக நடக்கும் 2, 10க்கு உரியவர்கள் பரிவர்த்தனை அடைகிறார்கள். இந்த மாதத்தில் 15 நாட்கள் ராசியைப் பார்த்த நிலையில் சூரியன் இருக்கிறார். அதன் பிறகு அவர் சுபத்துவத்தை அடைகிறார். அதற்குப் பிறகு அவர் ராகுவுடன் சேரந்தாலும் உச்ச சுபருடன் இருக்கிறார். எட்டாம் இடம், 10 ஆம் இடம் வலிமையாக இருக்கக்கூடிய நிலையில், 2 ஆம் இடம் அபரிமிதமான நல்ல அமைப்பாக உள்ளது.

2 ஆம் வீடு என்பது பண வரவைக் குறிக்கக் கூடியது. காசு பணம் இருக்கக்கூடிய வீட்டில் புதன், சுக்கிரன், குரு, சூரியனுடைய பார்வை என இந்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு அதிர்ஷ்டம் கொட்டும். பண வரவு அதிகளவில் இருக்கும். ஏற்கனவே கை வராது என்று விடப்பட்ட பணம் உங்களைத் தேடி வரும். மார்ச் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.

எளிமையான நல்ல மாதமாக இருக்கும். நீண்டநாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு ஓரளவுக்கு திருமண அமைப்புகள் கைகூடி வரும். பிரிந்து போகலாம் என்ற நிலையில் இருந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழலாம் என்ற மனமாற்றம் ஏற்படும். எல்லாம் நிறைவாக இருக்கக்கூடிய அமைப்புகள் உண்டு.

மார்ச் 29 ஆம் தேதி முதல் அஷ்டமசனி ஆரம்பிக்கிறது. இந்த சமயத்தில் அகல கால் வைக்க கூடாது. ஆனாலும், சிம்ம ராசிக்காரர்களுக்கு கடவுளின் அருள் இருப்பதால் உங்களுக்கு பெரிதளவு கஷ்டம் இருக்காது. இடமாற்றம் உண்டாவதற்கான வாய்ப்பு, வேலை மாற்ற அமைப்பு, சுபச் செலவுகள் ஏற்படுவதற்கான அமைப்பு உங்களுக்கு உண்டு. வீடு வாங்குவது, வீடு கட்டுவது போன்ற அமைப்புகள் உண்டு. பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது.

நண்பர்கள், மாமன், மச்சானால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உடலை வருத்தாவிட்டாலும், மனதை வருத்தக்கூடிய சூழல் உண்டு. மற்றபடி இந்த மாதம் உங்களுக்கு அபரிமிதமான நற்பலன்களையும், நல்ல வாய்ப்புகளையும், பணம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் தரக்கூடிய காலமாகவும் இருக்கும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+