Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு வீடு, நிலம் சொத்துக்களை குவிக்கும் யோகம்.. அதிர்ஷம் மேல் அதிர்ஷ்டம்
மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தனுசு ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் தனுசு ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
தனுசு
தனுசு ராசி மற்றும் லக்னத்தினருக்கு உங்கள் ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடிய மாதமே மார்கழி மாதம். இந்த மாதத்தில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் மாதமாக இருக்கும். ஜென்ம ராசியில் பாக்கியாதிபதியான சூரியன் இருப்பதால் அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இடமாற்றம், பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு அவை அனைத்தும் கிடைக்கும்.
அரசாங்க வேலை
அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் யோகம் ஏற்படும். நல்ல பதவிகள் கிடைக்கும். கணவர் ஒருபக்கம், மனைவி ஒரு பக்கம் வேலை செய்யும் நிலை, நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நிலை இருந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் மாறும். நீங்கள் நினைத்த மாதிரியான வேலை அமையும். செவ்வாய் பகவான் ஜென்ம ஸ்தானத்தில் இருப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.
புகழ் கிடைக்கும்
நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு சிகிச்சை, இயற்கையாக குழந்தைப் பேறு கிடைக்கும். ராசியாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதால் கடந்த கால நஷ்டங்கள் தீரும். நல்ல நன்மையாக திட்டங்கள் உருவாகும். கடல் கடந்து புகழ் கிடைக்கும் பாக்கியம் ஏற்படும். ஏற்கனவே கடல் கடந்து உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு வருமானத்தில் நல்ல வெகுமானம் கிடைக்கும்.
தொழில்
கணினி சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு கை நிறைய காசு பணம் கிடைக்கும். கடல் கடந்த பயணம் கெளரவமாக அமையும். குலதெய்வ விருட்ச வழிபாடுகள் திருமண யோகம், திருமணம் மறுமணமாகாத பாக்கியத்தை கொடுக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் நடக்கும் யோகம் ஏற்படும். வியாழக்கிழமை தோறும் குலதெய்வத்தை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது பெரும் ஏற்றத்தைக் கொடுக்கும். திருமணமானவர்களுக்கு சந்தோஷமான சூழல் அமையும். காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். சமுதாயத்தில் கெளரவமான வாழ்க்கையை அடைவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, உத்தியோகத்தில் ஏற்றம் பெறும் யோகம் உண்டாகும்.
-
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications