சதாஷ்டக யோகத்தால் அதிர்ஷ்டம்.. துலாம் முதல் மீனம் வரை ராஜயோகம் பெறும் ராசியினர்?
செவ்வாய் பெயர்ச்சி: பிப்ரவரி 7 ஆம் தேதி சூரியனும் செவ்வாயும் இணைந்து சதாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகத்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. துலாம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியால் 12 ராசிகளும் அதன் தாக்கத்தை அனுபவிக்கும். சில ராசிக்காரர்களுக்கு அதிகமான சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். பிப்ரவரி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் முக்கியமான மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.

நட்சத்திரங்கள், கிரகங்களின் இடப்பெயர்ச்சி இயக்கத்தை கணக்கிட்டே ஒருவரது ராசிபலன் கணக்கிடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி பிப்ரவரி 7 ஆம் தேதி சூரிய கிரகமும், செவ்வாய் கிரகமும் பிற்பகல் 02:08 மணிக்கு சதாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றன. பொதுவாக சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாகவும், ஒருவரின் ஆன்மா, சுய அடையாளத்தை குறிப்பவராகவும் சூரியன் விளங்குகிறார். செவ்வாய் கிரகம் ஒருவரின் ஆர்வம், முழுமை, போட்டி மனப்பான்மையின் அடையாளமாக உள்ளார்.
சூரிய கிரகமும், செவ்வாய் கிரகமும் இணைந்து சதாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் இருக்கும். குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷடமான பலன்களை உண்டாக்கும். அந்த வகையில், அதிர்ஷ்டங்களையும், ராஜயோகங்களையும் அள்ளப் போகும் ராசிகள் எவை என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் துணிச்சல் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உருவாகும்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் தங்களுடைய வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய இன்பமான வாழ்க்கைக்கு திரும்புவார்கள். வியாபாரம், தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு முருகப் பெருமானின் அருள் பூரணமாக கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்குவீர்கள். அதன் மூலம் லாபத்தைக் காண்பீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவாகரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது தடைகளை நீக்கி நல்ல பலன்களை அள்ளித் தரும்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு மனதில் தன்னம்பிக்கை, தைரியம் பிறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தந்தை வழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். சகோதரர்களுடன் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள், மன கசப்புகள் நீங்கும். மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை நடத்துவீர்கள். சிவனை வழிபட்டு வருவது உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை வழி உறவினர்களால் பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணங்கள் கைக்கு வந்து சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி காண்பீர்கள். எதிரிகளால் உங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரம், தொழிலில் கொடுத்த கடன் தொகைகள் திரும்ப உங்களுக்கு வந்து சேரும். சிவபெருமானை வழிபடுவது, சிவ மந்திரத்தை ஜெபிப்பது நல்ல பலன்களைத் தரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு தாயுடைய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அன்பு பெருகும். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வீண் விரைய செலவுகள் ஏற்படும். தேவையான இடத்தில் இருந்து பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். சாதுரியமாக அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள். விநாயகர் வழிபாடு உங்களுக்கு சிறந்த பலனைத் தரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications