செவ்வாய் பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு இப்படி ஒரு சிக்கலா?.. கவனம்.. கவனம்
செவ்வாய் பெயர்ச்சி: மிதுனம் ராசியில் வக்ர நிலையில் உள்ள செவ்வாய் கடகத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் மிதுன ராசியில் உள்ளார். ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய் மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூன் 6 ஆம் தேதி வரை அவர் கடகம் ராசியில் நீட்ச நிலையில் இருக்க போகிறார். சுமார் 63 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்க உள்ளது. நீட்ச நிலை என்பது ஆங்காங்கே சில பிரச்னைகள் நிலவினாலும் சில நல்ல பலன்களும் கிடைக்கும். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது ரிஷப ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்தப் பதிவில் காணலாம்.

ரிஷபம்
செவ்வாய் உங்களுக்கு விரயாதிபதி மட்டுமல்ல அவர் ஏழாம் வீட்டுக்கும் அதிபதி. இது களஸ்திர ஸ்தானத்தை குறிக்கும். சட்ட சிக்கல்கள், வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். செலவுகள் குறையும். நிலம் சார்ந்த முதலீடுகள் சாதகமாக உள்ளன. காவல்துறை மற்றும் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு ஓய்வு கிடைக்கும்.
விராயாதிபதி நீட்சம்
விவசாயிகள், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்போருக்கு இந்த காலம் நன்றாக இருக்கும். விரயாதிபதி நீட்சமாக இருப்பது மிகவும் நல்ல அமைப்பு. இதனால் வருமானம் திருப்தியாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நிம்மதி உண்டாகும்
தந்தை வழியில் ஆதரவு உண்டு. பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி அதன் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட பயணங்கள் இந்த காலத்தில் நிறைவேறும். மனதில் நிம்மதி ஏற்படும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும்.
பயணங்களில் தடை
உங்களின் வெளியூர், வெளிநாடு பயணங்களில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அதில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் ஏழாம் வீட்டு அதிபதி நீட்சமாவதால் உங்களுடைய வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
குழந்தைகளின் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்களுக்கும் அவ்வபோது ஒவ்வாமையால் உடல்நலக் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்க்கவும். தொழிலில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பணிச்சுமை அதிகரிக்கும்.
பரிகாரம்
வள்ளி தெய்வாணை இணைந்துள்ள திருத்தணி, பழமுதிர் சோலை முருக பெருமானை வழிபடுவதன் மூலம் உங்கள் பிரச்னைகள் குறைந்து நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications