எல்லா பக்கமும் பணம்.. மேஷ ராசிக்கு மெகா ஜாக்பாட் அளிக்கும் மாசி மாதம்

Subscribe to Oneindia Tamil

மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியல் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் (13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷ ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.

ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, ராசிக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய் வக்கிர நிலையிலும் இருக்கிறார். தைரிய, வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் செவ்வாய் வக்கிரமாக உள்ளார். ஆறாம் இடத்தில் கேது பகவான் இருக்கிறார். லாப ஸ்தானமான 11ஆம் இடத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. விரய ஸ்தானமான 12 ஆம் இடத்தில் சுக்கிரன் மற்றும் ராகு இணைகிறார்கள்.

masi month rasi palan mesham

சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார். அதே சுக்கிரன் இந்த மாதம் வக்கிரமாக போகிறார். அதனால் இந்த மாதம் நிறைய மாற்றங்களை காண போகிறீர்கள். லாப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. மாசி 12 ஆம் தேதி (24.2.2025) ராசி அதிபதியான செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.

மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் பெயர்ச்சி உள்ளது. மீன ராசியில் புதன் நீசமாகப் போகிறார். அங்கு சுக்கிரன் உச்சத்தில் இருப்பதுடன் பரிவர்த்தனையும் நடப்பதால், நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கும். மாசி 17 ஆம் தேதி (1.3.2025) சுக்கிரன் வக்கிரமாக போகிறார். சூரியன் 11 ஆம் இடத்தில் இருந்து சனி பகவானை அஸ்தமனம் செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பேறு கிடைக்கும்.

மனதுக்கு பிடித்த காரியங்கள் நிறைவேறும். உங்கள் குழந்தைகளுக்கு இருந்த திருமண தடை நீங்கி திருமண வாய்ப்பு கைகூடும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். இந்த காலத்தில் வீடு, வாகனம் விஷயங்களில் நீங்கள் திட்டமிட்டவை நிறைவேற வாய்ப்புள்ளது. குழந்தைகளின் செயல்களால் மதிப்பு, மரியாதை கிடைக்கும்.

பங்கு சந்தை சம்பந்தப்பட்ட காரியங்களில் முதலீட்டில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும். அரசுத் துறைகளுடன் இணைந்து கான்ட்ராக்ட் எடுத்து பணியாற்றி வருபவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நிலம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. நிலத்தில் செய்யும் முதலீடு நல்ல லாபத்தை தரும். சூரியன் 11 ஆம் இடத்தில் இருந்தால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும்.

உங்களின் வேலைக்கு நீங்களே இறங்கி முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். சோர்வடைந்தால் வெற்றி கிடைக்காது. செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் பிடிவாதம் அதிகரிக்கும். காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் நீங்கும். உங்களின் தொலைந்துபோன ஆவணங்கள் கிடைக்கும். இந்த காலத்தில் புதிய மாற்றங்களை தேர்வு செய்யாமல் இருப்பது நல்லது.

அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பழக வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. மாத இறுதியில் தன்னம்பிக்கை அதிகரித்து நிதானம் பிறக்கும். பணியிடத்தில் சிறு சிறு சங்கடங்கள் வந்து செல்லும். பணிச்சுமை அதிகரிக்கும். அதேநேரத்தில் வருவாய் நன்கு அதிகரிக்கும். சேமிப்பிலும் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கை துணையால் நற்பலன்கள் கிடைக்கும்.

தொழில் பார்ட்னர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி நாடு, வெளி மாநில பயணங்களால் சாதகம் ஆகும். வீண் விரயம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மன நிம்மதிக்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றுங்கள். சங்கடங்கள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+