கும்ப ராசிக்கு குதூகலமான காலகட்டம்.. தங்க நகைகளை வாங்கி குவிக்கும் நேரம்.. தொட்டது துலங்கும்
மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது கும்ப ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் கும்ப ராசியினர் பெறப் போகும் பலன்களை காணலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடத்தில் இருந்த ராகு 1 ஆம் இடத்துக்கும், ஏழாம் இடத்தில் கேது இருக்கிறார். 5 இல் குரு வரப் போகிறார். அமோக பலன்களைப் பெறப் போகும் ராசிகளில் கும்ப ராசியினர் முதன்மையானவர். 9 ஆம் பார்வையாக குரு விசேஷமாகப் பார்ப்பதால் இனி அனைத்து பாதிப்புகளில் இருந்தும் விடுதலை அடையப் போகிறீர்கள். இனி உங்களை யாரும் அசைக்க முடியாத காலகட்டமாக இருக்கும்.
மே 15 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதப் பலன்களை பெறுவீர்கள். துணை அல்லது துணைவியாருடைய ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 7 ஆம் இடத்தில் கேது வருவதால் நீங்கள் சொல்லுவதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது. துணை அல்லது துணைவியாரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பது நன்மை பயக்கும். சிறு சிறு பிரச்சனைகள் குடும்பத்தில் வருவதற்கான வாய்ப்புள்ளது.
துணை உங்களை ஆளுமை செய்யக்கூடிய நிலை ஏற்படும். பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உடம்பை வருத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தலைக்கு மேல் ராகு வருவதால் முதலீடு தொடர்பான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். 7 இல் அமர்ந்திருக்கும் கேது வேண்டாம் என்ற நிலையை கொடுப்பார்.
புதன் 3 ஆம் இடத்தில் அமர்ந்து மிகச்சிறந்த யோகங்களை கொடுப்பார். சூரியனுடன் சேர்ந்து புதனுடைய இயக்கம் மிக யோகமான காலகட்டத்தை தரும். 7, 5 ,3 எல்லாம் இயங்குவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். பயணத்தால் அலைச்சல்கள் உண்டாகும். கை, கால்களில் வலி ஏற்படும். பயணங்கள் மூலம் அசெளகரியம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
குரு பார்வை இருந்தாலும், பாத சனி இருப்பதால் வாக்குவாதங்களை குடும்பத்தில் தவிர்ப்பது நல்லது. செலவுகளால் பண விரையம் ஏற்படும். மீடியா லைம் லைட்டுக்கு வருவீர்கள். மீடியாவில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ் உண்டாகும். உங்களைப் பற்றி சமுதாயத்துக்கு வரும். பணம், புகழ், பெயர், மரியாதை, அந்தஸ்து, மருத்துவ உதவிகள் கிடைக்கும்.
ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்து அமோகமான பலன்களைத் தரும். ஆடை, ஆபரணங்களை வாங்கி குவிக்கும் யோகம் உண்டாகும். நம்பிக்கையைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். புதிய நபர்களிம் பழகும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகை ஈடுபட்டுவதை தவிர்ப்பது நல்லது.
குலதெய்வ வழிபாடு மற்றும் சங்கரன் கோயில் கோமதியம்மன் வழிபாடு நல்ல பலன்களை அள்ளித் தரும். செல்போன் வால்பேப்பரில் அம்மன் படத்தை வழிபடுவது, பார்ப்பது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications