Meenam rasi palan: மீனம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் யோகம்.. இனி அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் மீனம் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
மீனம்
மீனம் ராசி மற்றும் மீனம் லக்னத்தினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் இருப்பதால் கண்டிப்பாக மலைப் பிரதேசங்களுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். காசி, கயா, ராமேஸ்வரம் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். சில பேர் மலை ஏற்றம் செய்து வரும் வாய்ப்பு ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் குரு உச்சமடைவதால் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆண் குழந்தை பிறக்கும் யோகம் உண்டு. உங்களுடைய கர்மாவிற்கான கடன்கள் எல்லாம் தீரும். கடன் கிடைக்கும். கடனை அடைப்பீர்கள். நிறைய பேர் கல்விக் கடன், வீட்டுக் கடனை அடைத்து முடிப்பீர்கள். வங்கிக்கும், உங்களுக்கும் சம்மந்தம் ஏற்படும். மீனத்திற்கு இருக்கும் டென்சன், மன அழுத்தம் நீங்கும். கவலைகள் தீரும்.
அரசுப் பணி
மாணவ, மாணவிகளுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். எதிர்பார்த்த வேலை, படிப்பு, ஊதியம் கிடைக்கும். நிறைய பேருக்கு அரசு சார்ந்த பணிகள் கிடைக்கும். சூரியன், செவ்வாய் தன் வீட்டில் பாக்கியத்தில் இருப்பதால் நல்ல நல்ல நன்மைகள் ஏற்படும். மீனம், விருச்சிகம், கடகம், மகரம், ரிஷப ராசியினருக்கு நல்ல வேலைகள் கிடைக்கும்.
தைரியம்
மீன ராசியினருக்கு நிறைய தைரியம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளுடன் நட்பாக, சந்தோஷமாக இருப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிறைய மனக் கவலைகள் நீங்கும். இதைத் தான் செய்ய வேண்டும், இதுதான் சரியான வழி என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் நீங்கும்.
வழிபாடு
அபாரமான மாற்றங்கள் ஏற்படும். இல்லத்தரசிகளுக்கு நல்ல யோகம் உண்டாகும். நிறைய பரிசுகள், ஏற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு யோகம் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மதுரை மீனாட்சியம்மனை மனதார வழிபடுவது உங்களுக்கு தேவையானவை எல்லாம் நடைபெறும் யோகத்தை ஏற்படுத்தும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications