Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு 2 லட்டு தின்ன ஆசையா.. அதிர்ஷ்டமும், ஆபத்தும்.. ரொம்ப கவனம்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.
இந்த செப்டம்பர் மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்..
மீனம்
மீனம் ராசி, லக்கினக்காரர்களுக்கு சனி வக்கிரத்தில் அமர்ந்திருக்கிறார். திரிகோணத்தில் சூரியன், புதன் அமர்ந்திருக்கின்றனர். செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு புரட்டாசி ஆரம்பிக்கும்போது புதனும், சூரியனும் இணைகின்றனர். கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவனுக்கு டென்சன் அதிகரிக்கும். பழைய விஷயங்களைப் பேசுவதால் பிரச்சனைகள் ஏற்படும்.
அரசு ஒப்பந்தங்கள்
அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு தொடர்பான புரோஜக்டுகள், மருத்துவ சீட் போன்றவை கிடைக்கும். இதுவரை புரியாமல் இருந்த விஷயங்கள் எல்லாம் இனி புரிய ஆரம்பிக்கும். பெரிய வெற்றிகள் உண்டாகும். வேலையில்லாத ஆட்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். இருக்கிற வேலைக்கு தொந்தரவு ஏற்பட்டு வேறு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
இடமாற்றம்
சனி, செவ்வாய், சூரியன், புதன் இணைவது நல்லது. பொதுவாகவே மீன ராசியினருக்கு இடமாற்றம் ஏற்படும். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்தால் கண்டிப்பாக பிரச்சனைகள் ஏற்படும். மரியாதை கிடைக்காது. அந்த அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும். செவ்வாய் நகர்ந்து செல்லும்போது உங்களுடைய ஆரோக்கியத்தில் வரும் பிரச்சனைகள் தீரும். வாயு தொந்தரவு ஏற்படும்.
அரசு வேலை
அஷ்டமத்தில் செவ்வாய் அமரும்போது சில பேருக்கு அரசுத் துறையில் காவல் துறையில் வேலை கிடைக்கும். ஆன்மீகத் துறை, தீயணைப்புத் துறைகளில் வேலை கிடைக்கும். எதிர்பார்க்காத வெற்றியினால் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
நரம்பு, தோல், தலை தொடர்பான இடங்களில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வரும் ஒரு மாதத்திற்கு மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சுக்கிரன் சிம்மத்துக்கு சென்றிருக்கிறார். தாய் வழியில் வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். கோபம், ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.
வழிபாடு
நடைப்பயணமாக பெருமாள் கோயிலுக்குச் சென்று வந்தால் உங்களுடைய பாதிப்புகள் குறையும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதமும் நன்மைகள் கிடைக்கும். அனந்த நாராயண பெருமாளை வழிபாடு செய்வது உங்களுக்கு அபரிமிதமான மகிழ்ச்சியையும், வளர்ச்சயையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications