மீன ராசியை ஜாவா சுந்தரேசனாக மாற்றும் குரு பகவான்.. இவ்வளவு மாற்றமா?

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடிமாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) மீனம் ராசிக்கு இந்த வாரத்திற்கான பலன்கள்குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபடவேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு விஷேசமான மாதமான ஆடி மாதம்பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும்இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும்தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில்,இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்குகிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Meenam Luckyzodiac signs

மீனம்

மீனம் ராசியினை குரு பகவான் பார்ப்பதால் உத்யோகம், தொழில், கல்வியில் சிறப்பான ஏற்றம் உண்டு. கடந்த காலம் உங்களை சோர்வுக்கு உள்ளாக்கிய மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். சுபகாரிய தடைகள் விலகும். அடுத்தடுத்து சுப காரியங்களினால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பண வரவு சிறப்பாக இருக்கும். பழைய பாக்கி வசூலாகும்.

கடன் தீரும்

கடன் சுமை குறையும். பொருளாதாரம் உயர்வு பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றம்காண கூடிய வாரமாக இந்த வாரம் இருக்கும். உத்யோகம், தொழிலில் தடைபட்ட பலன்கள் எல்லாம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டும். தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். முதலீடு பல மடங்காக உயரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

தன்னம்பிக்கை

மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். இறங்கியகாரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.வார்த்தைகளில் கவனம்வார்த்தைகளில் கவனம் வேண்டும்.உத்யோகத்தில் உங்கள் உயரதிகாரிகள், தொழிலில் உங்களிடம் பணியாற்றும் ஊழியர்களிடம்மிகவும் எச்சரிக்கையாக பேசவும். ஜென்மத்தில் சனி பகவான் இருப்பதை நினைவில்வைத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் வேண்டும். உடல் நலபிரச்னைகளில் அலட்சியம் வேண்டாம். உடற்பயிற்சியை வாடிக்கையாக்கி கொள்ளுங்கள்.வண்டி, வாகனத்தில் எச்சரிக்கை வேண்டும். பரிகாரம் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனமாகவும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். அப்பா, அம்மாவுடன் அவ்வப்போது வாக்குவாதம் வந்து செல்லும்.

வழிபாடு

அம்மா அப்பாவுடன் மனதிற்கு சங்கடம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுடன் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். ஞாயிற்றுக்கிழமை நாளில் வீட்டு அருகில்உள்ள அம்மன் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+