Rasi Palan This Week: ஒரே ஒரு ரிஸ்க்.. மீனம் ராசிக்கு மொத்தமாக மாறும் வாழ்க்கை
வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். உத்யோகம், தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் விலகி அடுத்தக்கட்டத்திற்கு செல்வதற்கான வழிவகை பிறக்கும். மனதில் இருந்த எதிர்மறை சிந்தனைகள் நீங்கும். கடன் சுமை குறையும். பழைய பாக்கி வசூலாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும்.
ரிஸ்க்கில் வெற்றி
எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். இறங்கிய காரியங்களில் எல்லாம் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் தடைபட்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது உகந்த காலம். உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் கை மேல் பலன் கிடைக்கும். மற்றவர்கள் செய்ய யோசிக்கும் பல விஷயங்களை ரிஸ்க் எடுத்து தடம் பதிப்பீர்கள். நிலம் சார்ந்த பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமாக தீர்வு கிடைக்கும்.
நிலத்தில் முதலீடு
மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தெளிவான திட்டமிடலால் பிரம்மாண்ட முன்னேற்றம் காண்பீர்கள். நிலம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். நிலம், வீடு, விவசாய தோட்டம் உள்ளிட்ட சொத்து சேர்க்கை இருக்கும். அடுத்தடுத்த நல்ல செய்திகளால் மனதில் நிறைவு ஏற்படும். வண்டி, வாகனம், ஆபரணங்கள் ஆகியவையும் வாங்குவீர்கள். பெற்றோர் மூலம் ஆதாயம் அடைவீர்கள். சுப காரிய தடைகள் விலகும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
கவனம்
ரத்தபந்த உறவுகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். உடற்பயிற்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள். முக்கியமாக ரத்த அழுத்தம், சர்க்கரை சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்போர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எந்த தொந்தரவாக இருந்தாலும், காலம் கடத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களின் வீட்டு அருகில் உள்ள கற்பக விநாயகர் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.
-
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications