Rasi Palan This Week: மேஷ ராசி மெகா லாபம் –அடிச்சு தூக்கும் அதிர்ஷ்டங்கள்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 முதல் ஐப்பசி 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mesham-rasi-palan-what-kind-of-benefits-that-mesham-aries-signs-will-get-from-october-27-to-novem

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களினால் அதிக ஆதாயம் உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். நீண்ட காலமாக திட்டமிட்ட ஆன்மீக மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். இதனால் மனதில் மகிழ்ச்சி அதிகம் ஏற்படும்.

முன்னேற்றம்

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். கடந்த வாரத்தில் இழுபறியாக இருந்த காரியங்கள் இந்த வாரத்தில் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உத்யோகம், தொழிலில், வியாபாரம், கல்வி எல்லாவற்றிலும் முன்னேற்றம், லாபம் உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற அங்கீகாரங்கள் கிடைக்கும்.

செல்வாக்கு

உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வந்து உங்களின் செல்வாக்கு உயரும். தொழில் விரிவாக்கம் செய்வதற்கான சூழல் உருவாகும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைக்கும். தொழில் தடைகள் விலகும். அப்பா, அம்மாவுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

கவனம்

அலைச்சல்கள், பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஓய்வு கிடைக்காதா என்று ஏங்குவீர்கள். வீண் பதற்றம், கோபம் ஏற்படும். பதற்றம், கோபம் ஆகியவற்றை தவிர்த்து மனதை சம நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பிறர் குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடு கூடாது.

பரிகாரம்

வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது முக்கியம். முதுகு மற்றும் பாதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் வேண்டும். சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அலட்சியப்படுத்த வேண்டாம். பைரவர் கோயில் சென்று வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+