Mesham Rasi Palan: மேஷ ராசியினருக்கு கிரகங்கள் தரும் பலன்கள், பரிகாரங்கள்.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

கிரக பலன்கள்: மேஷ ராசிக்காரர்களுக்கு எந்தெந்த கிரகங்கள் அதிகார கிரகங்களாக இருக்கும். அந்த கிரகங்களால் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களை நீங்கள் செய்யலாம், செய்யக் கூடாது என்பது குறித்த பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே அனைத்து கிரகங்களும் தங்களது சொந்த இடத்திலேயே அமையப் பெற்றிருக்கும் வரத்தைப் பெற்றிருப்பவர்களாக இருப்பார். சுக்கிர பகவான் சுகத்தையும், செல்வத்தையும், புகழையும் கொடுக்கக் கூடியவர். சுக்கிரன் 2க்குரிய தனாதிபதியாக உங்களுக்கு இருக்கிறார். இல்வாழ்க்கை, இல்லறம், காதல் மகிழ்ச்சிக்குரியவர் சுக்கிரன். உங்களுக்கு 7க்கு உரியவராகவும் சுக்கிரன் இருக்கிறார்.

mesham-rasi-palan-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-what-things-they-can-and-canno

சுக்கிரன்

சுக்கிர பகவானால் உங்களுக்குப் பணம் வந்து கொண்டே இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். சுக்கிர பகவான் கன்னியில் நீச்சமாகவும், மீனத்தில் உச்சமாவகவும் இருக்கிறார். சுக்கிரன் மறைவாக இருந்தால் கற்கண்டு போட்டு விளக்கேற்றி வைத்து வழிபடுவது நன்மை பயக்கும். வைபவ லட்சுமி படத்திற்கு மல்லிகை பூ வைத்து வழிபடுவது குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

பரிகாரம்

சுக்கிரன் அனுக்கிரகம் கிடைக்க இனிப்பு பொருள்களை நல்ல நாட்களில் கொடுப்பது நல்லது. வெள்ளை நிற இனிப்புகளை தானமாகக் கொடுப்பது உங்களுக்கு சுக்கிரனின் பரிபூரண அருள் கிடைக்கும். 3, 6க்கு உரிய கிரகமாக புதன் பகவான் அமைகிறார். புதன் தான் ஜோதிட சாஸ்திரத்தில் கடனுக்கு அதிபதியாக இருக்கிறார். அதனால், உங்களுக்கு புதன் பகவான் நன்றாக இல்லாமல் இருப்பது நல்லது.

புதன் பகவான்

புதன் பகவான் நன்றாக இருந்தால் கடன், நோய், பகை, கஷ்டம் போன்றவற்றை தரக்கூடியவராக இருப்பார். புதன் கன்னியில் உச்சமாகவும், மீனத்தில் நீச்சமாகவும் இருப்பார். உங்கள் ஜாதகத்தில் புதன் நீச்சமாக இருந்தால் நல்லது நடக்கும். வித்யா ஞானத்துக்கு சிறிது பாதிப்புகள் வந்தாலும் நன்றான அமைப்பாக இருக்கும். புதன் பகவான் உங்களுக்கு நன்றாக இருந்தால் சோதனைகளும், கடன்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

கடன் வேண்டாம்

மேஷ ராசிக்காரர்கள் இஎம்ஐ இல் பொருள்களை வாங்காமல் இருப்பது நல்லது. 3, 6க்கு உடைய புதன் பகவான் இருப்பதால் ஒரு கடனை முடித்துவிட்டு இன்னொரு லோன் வாங்குவது நல்லது. லோன் மேல் லோன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பெருமாள் கோயிலுக்குச் சென்று புதன்கிழமைகளில் அத்தி மரக்கன்றை நட்டு வருவது புதன் பகவானின் பாதிப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

பரிகாரம்

விஷ்ணு சரஸ்ஹர நாமம் படிப்பது நல்ல மேன்மையைத் தரும். பச்சைப் பயிறை தண்ணீரில் ஊற வைத்து வெல்லம் கலந்தோ, சுண்டலாகவோ செய்து பறவைகளுக்குத் தானமாக கொடுத்தால், உங்களுக்கு இரும் கடன்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. சூரியன் 5 க்கு உரியவனாக இருக்கிறார். புத்திர ஸ்தானத்தை தருகிறார். பித்ரு காரியங்கள், மூதாதையர் தொடர்புகளுக்கு எல்லாம் முக்கிய காரணியாகவும், புகழ், அரசியலுக்கு உரியவராகவும் இருக்கிறார்.

சூரிய பகவான்

அரசியலில் கால் வைத்தால் அற்புதமான ஏற்றத்தைப் பெறுவீர்கள். எந்தவொரு சங்கம், அமைப்பில் இருந்தாலும் நல்ல நிலையில் இருப்பீர்கள். தலைவர் பதவி உங்களுக்கு கிடைக்கும். சூரிய பகவான் சிம்மத்தில் இருந்தால் ஆட்சி, மேஷத்தில் இருந்தால் உச்சம், துலாமில் இருந்தால் நீச்சம். சூரியன் சிம்மத்திலோ, 3, 6, 8 இல் இருந்தாலோ, கெட்டிருந்தாலோ சிவன் ஆலயத்தில் உள்ள சூரியன் வழிபாட்டைச் செய்வது நன்மையை ஏற்படுத்தும்.

பரிகாரம்

சூரிய பகவானுக்கு வாழை இலையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் சொல்லி, சிவப்பு வஸ்திரத்தை சாற்றி ஞாயிற்றுக்கிழமை வழிபடுவது பரிபூரண அருளைக் கொடுக்கும். 8க்கு உடையவர் செவ்வாய். உங்களுடைய ராசியாதிபதி. செவ்வாய் ரொம்ப வலுத்தால் வம்பு, வழக்கு, பிரச்சனை போன்றவை ஏற்படும். செவ்வாய் நன்றாக இருந்தால் நிறைய கோர்ட், கேஸ், வழக்குகளை சந்திப்பீர்கள். செவ்வாய் மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்சம்.

வழிபாடு

மகரத்தில் செவ்வாய் இருந்தால் முருகப் பெருமான் வழிபாட்டை தொடர்ந்து செய்வது நல்லது. வம்பு, வழக்கு போன்ற பிரச்சனைகளை செவ்வாயன்று செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். முருகனுக்கு செவ்வரளி மலரை சாற்றி வழிபடுவது நன்மையைத் தரும். நிதி சார்ந்த தொழிலில் நீங்கள் ஈடுபடாமல் இருப்பது நல்லது. குருவால் உங்களுக்கு நன்மையும் இல்லை. பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படாது.

பரிகாரம்

சனி உங்களுக்கு பாதகாதிபதி. அதனால், சனிக்கிழமைகளில் பெரிய புரோஜக்டுகளில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது. வருடத்திற்கு ஒருமுறை ஐயப்பனுக்கு மாலையிடுவது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில், சனி ஹோரைகளில் 18 ஆம் படி ஐயப்பனை வழிபடுவது நன்மையைத் தரும். சங்கு புஷ்பங்களை அனுமனு்கு இட்டு வழிபடுவது ஏற்றத்தை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+