செப்டம்பர் பலன்: மேஷ ராசிக்கு 14 ஆம் தேதிக்குப் பிறகு வரப்போகும் அதிர்ஷ்டம்.. வாழ்க்கையே மாறப்போகுது
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு நல்லது எவ்வளவு நடந்தாலும் 15 ஆம் தேதிக்குப் பிறகு தான் நல்ல காலகட்டமாக இருக்கும். சூரியன், கேது சேருவது பொதுவாகவே நல்லது கிடையாது. முக்கியமாக, சூரியன், சுக்கிரன், கேது, புதன் ஆகிய 4 கிரகங்கள் சேருவதால் வீட்டில் இருக்கும் பெரியோர் கொழுப்பு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அடுத்த ஒரு மாதத்துக்கு நன்றாக இருக்காது.
ஆரோக்கியம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். ஆன்மீகத்துக்காக நிறைய பயணங்கள், குலதெய்வங்களை வழிபடுவது, கோவில் கட்டுவது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெண்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது நல்லது. நெஞ்செரிச்சல், அடிவயிறு, மேல்வயிறு, அலர்ஜி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.
காதலில் தோல்வி
குழந்தைகளின் ஆரோக்கியத்தில், வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும். காதலிப்பவர்களுக்கு கட்டாயமாக பிரேக்அப் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாத பழக்க வழக்கம், தேவையில்லாத நட்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசு வேலை, அரசு சீட்டுகள் கிடைக்கும். நீட் தேர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாராத விஷயங்கள் நடக்கும்.
எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்
செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு பெரிய வெற்றிகள் கிடைக்கும். அதுவரை கொஞ்சம் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுவீர்கள். செப்டம்பர் 14 ஆம் தேதி வரை ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. சுக்கிரன், கேது சேருவதால் மாதவிடாய் கோளாறு, சிஸ்ட் பிரச்சனை, கர்ப்பப்பை பிரச்சனை, சொந்தமாக இருக்கக்கூடிய அத்தை, சித்தி இறப்பது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பிள்ளைகளுக்கு ஏற்றம்
இந்த காலகட்டத்தில் சூரியன், புதன் 6 ஆம் இடத்தில் அமருவது தான் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் உண்டாக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பொருளாதார ஏற்றமும், அவர்களால் நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீத முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். காமாட்சி அம்மன் வழிபாடு ஏற்றத்தையும், நல்ல மாற்றத்தையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications