நிலம், நகையில் செம லாபம்.. மிதுனம் ராசிக்கு அற்புதன பலன்களை தரும் மாசி மாதம்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியல் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில்(13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மிதுனம் ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.
உங்கள் ராசியில் செவ்வாய் வக்கிரமாக இருக்கிறார். நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் கேது, ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. பத்தாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார்கள். 12ஆம் இடமான விரய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளார். சுக்கிரன் - குரு பரிவர்த்தனை நடைபெறவுள்ளது.

மாசி 1 ஆம் தேதி (13.2.2025) சூரிய பகவான் அஸ்டம ஸ்தானத்தில் இருந்து உங்கள் பாக்கிய ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இது உங்கள் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்க போகிறது. மாசி 12 ஆம் தேதி (24.2.2025) ராசிஅதிபதியான செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்துக்கு பெயர்ச்சியாக உள்ளார். புதன் கிரகம் தான் உங்கள் ராசியாபதி.
மீனம் ராசியில் புதன் நீசமாகப் போகிறார். அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும், குரு பரிவர்த்தனையால் நீட்சபங்க ராஜயோகம் கிடைக்கும். இது உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறார். மாசி 17 ஆம் தேதி (1.3.2025) சுக்கிரன் வக்கிரமாக போகிறார். ஐந்தாம் அதிபதி பத்தாம் இடத்தில் இருப்பது நல்ல பலன்களை தான் கொடுக்கும்.
சூரியன் உங்கள் தைரிய, வீரிய ஸ்தானத்துக்கு அதிபதி. சூரியன் எட்டாம் இடத்தில் இருந்து தடுமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும். அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளில் தடை, தந்தை உடல்நலத்தில் பிரச்னை என பல சங்கடங்களை அனுபவித்திருப்பீர்கள். தற்போது சூரியன் ஒன்பதாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய மாற்றங்கள் ஏற்படும்.
பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களின் தனித்தன்மை அதிகம் வெளிப்படும். நீண்ட காலமாக நிலம் வாங்குவதற்கு முயற்சி செய்திருந்தால் அது இந்த காலத்தில் நிறைவேறும். காது, கழுத்து சம்பந்தப்பட்ட ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் நீங்கள் வாங்கும் நகை பெரிய வளர்ச்சியை கொடுக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். காது, மூக்கு தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும்.
தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் தடம் பதிப்பார்கள். வீடு, வாகனம், சொத்து ஆகியவற்றில் உங்களின் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உறவுகள், பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. தாயின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியை சந்திப்பீர்கள். சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. பங்கு சந்தையில் நல்ல லாபம் வரும். இருப்பினும் அதில் முதலீடு செய்வதற்கு முன்பு நல்ல திட்டமிடல் அவசியம். காரியத்தில் தடை இல்லாமல் நிறைவேறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறுக்கான வாய்ப்பு உருவாகும்.
இந்த காலத்தில் கோபம், பிடிவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் உறவுகளுக்குள் மன கசப்பு ஏற்படும். மாத தொடக்கத்தில் வண்டி, வாகனத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் பிரச்னைகளை தேடி வருவார்கள். பணிச்சுமை அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் சற்று அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ள வேண்டும்.
எட்டாம் அதிபதியான சனி பகவான் அஸ்தமனம் ஆவதால் வயது முதிந்தவர்களுக்கு ஆயுள் பயத்தை கொடுத்து மனரீதியான வேதனைகளை கொடுக்கும். தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். கருப்பராயன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினால் பிரச்னைகள் குறைந்து வெற்றி அதிகரிக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications