Rasi Palan This Week: மிதுன ராசிக்கு வெற்றியை குவிக்கும் நேரம்.. வேலையில் மட்டும் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Mithunam Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mithunam-rasi-palan-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-people-from-march-30-to-april-5

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)

மிதுன ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றிகளைக் கொடுக்கக் கூடிய வாரமாக இருக்கும். தொழில் வேலை, அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் அதிகளவிலான பிரச்சனைகள், பாதிப்புகள் இருக்கும். நம்ப முடியாத அளவுக்கு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சட்ட ரீதியான பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் தேவையில்லாத புகாரில் சிக்கும் போன்ற வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.

மாற்றம், முன்னேற்றம்

நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம், இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் நடக்கும் நல்ல காலகட்டம். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடுகள் நீங்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

தொழிலில் கஷ்டம் தீரும்

தொழிலில் காணப்பட்டிருந்த கஷ்டங்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். அலர்ஜி, ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகள், சைனஸ் தொந்தரவுகளில் கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு பெரிய பலத்தைக் கொடுக்கும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சுபகாரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் நல்ல காலகட்டம். பங்குனி மாதம் என்று யோசிக்கத் தேவையில்லை.

வழிபாடு

எந்தவித பாதிப்புகளிலும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. யாருக்காவது உடம்பு சரியில்லை, ரத்த தானம் கேட்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தான தர்மங்களை செய்வது நல்லது. நண்பர்கள், சக ஊழியர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது வெற்றியைத் தரும். சந்தோஷம் ரீதியாக 60 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+