மிதுன ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும் யோகம்.. திடீர் அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையே மாறப்போகுது
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான மாற்றங்களும் கிடைக்கும் காலகட்டம். இடமாற்றம், வீடுமாற்றம், மனைமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் என மாற்றங்களைச் சந்திப்பீர்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயம், பல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் கவனம் தேவை.
திடீர் அதிர்ஷ்டம்
எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடைபெறும் வாய்ப்புள்ளது. பெற்றோருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோருடன் பகைமையை ஏற்படுத்தி, இடைவெளி ஏற்படுத்த முயற்சிப்பார்கள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தொடர்ச்சியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டத்தால் யோக பலன்களை அதிக அளவில் பெறுவீர்கள்.
செல்வாக்கு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நிறைவாக இருக்கும். சமுதாயத்திலும், குடும்பத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் இருந்து வந்த பாதிப்புகள் தீரும்.
நம்பிக்கை
துணையுடன் இருந்து வந்த பாதிப்புகளில் நிவர்த்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம், படிப்பு, தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்படும். வரும் மாற்றங்கள் அனைத்தையும் இந்த காலகட்டத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. புதன்கிழமை தோறும் இஷ்ட தெய்வத்தை வழிபடுவது அனுகூலத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications