திமுகவில் இணைந்தவுடன் அன்வர் ராஜா செய்த சம்பவம் – பாராட்டிய மு.க.ஸ்டாலின்
சென்னை: குடியுரிமை சட்டம் தொடங்கி வக்பு வாரிய சட்டத் திருத்தம் வரை இஸ்லாமியர்களுக்கான பிரச்சனைகளுக்கு போராடியது திமுகதான். இஸ்லாமிய மக்களுக்கு ஒரு இடர் என்றால் உடனடியாக துணை நிற்பது திமுக தான் என்று சென்னையில் நடைபெற்ற நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அவர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவை பாராட்டவும் செய்தார்.
நபிகள் நாயகத்தின் 1,500வது பிறந்தநாள்விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "அண்ணாவும், கலைஞரும் சந்தித்துக் கொண்டது திருவாரூரில் நடைபெற்ற மிலாது நபி விழாவில்தான். இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் அந்த சந்திப்பின் போதுதான் அமைந்தது. இந்த மேடையில் இருப்பவர்கள் அனைவருக்கும் இடையிலான ஒற்றுமை நீடிக்க வேண்டும். ஒற்றுமை தான் கொள்கைகள் வெற்றி பெறுவதற்கான முதல் படி.

அண்ணா கலைஞர் சந்திப்பு
பழமைவாத அடக்குமுறைகளை எதிர்த்து, ஏழைகள் மீது கருணை புரிந்து, நமது நடத்தை அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் நபிகள் நாயகம். நபிகள் கூறிய சமத்துவத்தைதான் பெரியாரும் முன்மொழிந்தார். வரலாற்றில் சிலர் தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர் நபிகள் நாயகம். அதனால் தான் பெரியார், அண்ணா, கலைஞர் நபிகள் நாயகத்தின் சமத்துவத்தை பரப்பினார்கள்.
காசாவில் நடைபெறும் துயரத்தை பார்த்து மனசாட்சி உள்ள யாரும் துயரப்படாமல் இருக்க முடியாது. இதற்கு விரைவில் நல்ல தீர்வு எட்டப்பட வேண்டும். பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். இதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதை இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இஸ்லாமியர்களுக்கு திமுக துணை
கலைஞர் தான் 1969 ஆம் ஆண்டு முதன் முதலாக மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார். அதை 2001 ஆம் ஆண்டில் அதிமுக ரத்து செய்தது. அதை 2006 திமுக ஆட்சியில் மீண்டும் கொண்டு வந்தோம். அதனால் தான் எப்போதும் உங்களில் ஒருவர் என்று சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கு ஒரு இடர் வருகிறது என்றால் துணை நிற்கும் முதல் அரசியல் இயக்கம் திமுகதான்.
அன்வர் ராஜா
குடியுரிமை சட்டம், முத்தலாக், வக்பு வாரியம் சீர்திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக உண்மையில் போராடியது திமுக தான். திமுக தொடர்ந்த வழக்கில் தான் வக்பு வாரியம் சீர்திருத்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளோம். அந்த சட்டத்திற்கு எதிராக அதிமுக இரட்டை வேடம் போட்டது உங்களுக்கு தெரியும். அதன் காரணமாக தான் அன்வர் ராஜா போன்றோர் அந்த அடிமைக் கூட்டத்தில் இருந்து திமுகவில் இணைந்துள்ளனர். வந்தவுடன் அவர் சதம் அடித்துவிட்டார்.
இஸ்லாமிய மக்களுக்காக திமுக கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டால் அது முடிய பல மணி நேரமாகும். இப்போதும் இந்த மேடையில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலிக்கப்பட்டு, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு இயக்கமாக திமுக உங்களில் ஒருவராக எப்போதும் துணை நிற்கும்." என்றார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications