Puthandu Palan 2026: புதிய அவதாரம் எடுக்கும் மகர ராசி.. வீடு, நிலம் வாங்கும் யோகம்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் (Magaram new year rasi palan):
மகர ராசிக்கு உங்கள் ராசிக்கு 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் உச்சம்பெற்றுள்ள நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எங்கே சென்றாலும் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டாகும். கடந்து சில ஆண்டுகளாக இருந்து வந்த கஷ்ட நஷ்டங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னுக்கு வரும் யோகம் உண்டாகும்.
வருடம் பிறக்கும் போதிருந்து மே மாதம் வரைக்கும் 6 ஆவது வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் மே மாதம் வரை பணத் தட்டுப்பாடு, கடன் பிரச்சனைகள், சிறு சிறு வாகன விபத்துகள், உறவினர்களுடன் சிறிய மோதல் போக்கு, நண்பர்களால் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிடுவது, உறங்குவதை கடைப்பிடிப்பது நல்லது.
வீடு, மனை வாங்கும் யோகம்
மே மாதம் வரைக்கும் குருவின் போக்கு சரியாக இல்லாததால் கவனம் தேவை. ஜூன் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை 7 ஆம் இடத்தில் குரு பகவான் அமருவதால் எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பண வரவு உண்டாகும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். விஐபிக்கள் அறிமுகமாவார்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன் பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.
அதிக வட்டிக்கு வாங்கிய பணத்தை குறைந்த வட்டிக்கு லோன் வாங்கி அடைக்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். சகோதரர்களுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அக்டோபர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரைக்கும் 8 ஆவது வீட்டுக்குள் குரு பகவான் வந்து அமருவதால் மற்றவர்களுக்கு கடன் தருவதை தவிர்ப்பது நல்லது. சாட்சிக் கையெழுத்து போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
வீண் வாதம் வேண்டாம்
உங்கள் ராசிக்கு 2ஆவது வீட்டிலேயே ராகு அமர்ந்திருப்பதால் சுற்றுப்புற சூழலைப் புரிந்து கொண்டு பேசுவது நன்மை பயக்கும். வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டும். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ராசிக்குள் ராகு வந்து அமருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். மிக கவனமாக செயல்பட வேண்டும்.
கேது பகவான் முன் பின் இருப்பதால் யாருக்காகவும் சாட்சி கையெழுத்துப் போடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிநாதன் சனி பகவான் வலுத்து அமர்ந்துள்ளதால் புதிய தொழில் தொடங்குவது, வியாபாரம், கிளை தொடங்குவது, பங்குதாரர்களை சேர்ப்பது என இந்த ஆண்டு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். அதிக லாபம் கிடைக்கும்.
அடுத்தடுத்து ஏற்றம்
உத்தியோகத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் ஜூன் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதப் போக்குகள் மாறும். நவம்பர் 12 முதல் டிசம்பர் வரை 8 இல் செவ்வாய் மறைவதால் விபத்துகள் விஷயத்தில் கவனம் தேவை.
மே முதல் ஜூன் வரை சுக்கிரன் மறைவதால் வண்டி வாகனத்தை பார்த்து பயன்படுத்த வேண்டும். திருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். காது கேளாதவர்களுக்கு உதவுவது, உலர் திராட்சை தானமாகக் கொடுப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications