Puthandu Palan 2026: பாஷாவாக மாறும் மீன ராசி.. புரோமோஷன் கன்ஃபார்ம்.. ஆபத்தும் காத்திருக்கும்

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

new-year-rasi-palan-2026-meenam-rasi-people-will-get-good-benefits-and-fortunes-in-this-new-year

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.

அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மீனம் (Meenam new year rasi palan):

மீனம் ராசிக்காரர்களே தைரிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரமாக முடியும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை அதிகமாகிக் கொண்டே போகும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று திணறுவீர்கள். கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காக கடன் வாங்கி செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

கடனை கட்டுப்படுத்துவது நல்லது

கடனை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு சாதகமாக சுக்கிரன், செவ்வாய் இருக்கும்போது இந்த வருடம் பிறந்துள்ளதால் எல்லா வகையிலும் வெற்றி ஏற்படும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். போட்டிகளில் ஜெயித்துக் காட்டும் யோகம் உண்டாகும். தேர்தல், விவாதங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. மக்கள் மத்தியில் பிரபலமாகும் வாய்ப்புள்ளது.

வீடு, வாகன செலவு

4 ஆம் இடத்தில் மே மாதம் வரை குரு பகவான் அமர்ந்திருப்பதால் அம்மாவிற்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவுகள் ஏற்படும். வீடு, வாகன செலவுகள் அதிகரிக்கும். அதனால் மே மாதம் வரை கவனமாக இருப்பது நல்லது. ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் 14 ஆம் தேதி வரை 5 ஆம் இடத்தில் குரு பகவான் வந்து அமர்வதால் எங்கு சென்றாலும் வெற்றி, பணவரவு உண்டாகும்.

புரோமோஷன் கன்ஃபார்ம்

வியாபாரமும் அமோகமாக இருக்கும். அதிக லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் ஜூன் மாதம் பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும் வாய்ப்பு ஏற்படும். அக்டோபர் 24 முதல் டிசம்பர் மாதம் வரை குரு பகவான் 6 ஆம் வீட்டில் மறைவதால் அந்த காலகட்டத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. வீண் பழி, வதந்திகள், விமர்சனங்கள் உங்கள் மேல் வரும் வாய்ப்புள்ளது. இந்த காலகட்டங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

ஜென்மச்சனி

ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடர்ந்து கொண்டே இருப்பதால் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவை தேவைப்படும். வீடு மனை வாங்குவது, விற்பனை செய்வது லாபகரமானதாக இருக்கும். வியாபாரம் புதிதாக தொடங்கும் வாய்ப்புள்ளது. ராகு கேது பெயர்ச்சி நன்றாக இருக்கும். ராகு கேது இப்போது இருக்கும் இடமும் நல்லது.

தொழில் தொடங்கும் யோகம்

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ராகு கேது மாறுவதும் நன்றாக இருக்கும் என்பதால் வேற்று மொழிக்காரர்கள், வேற்று இனத்தைச் சார்ந்தவர்கள் மூலமாக லாபம் ஏற்படும். அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். உங்களுக்கு ஆதரவாக வெற்றியைத் தரக்கூடிய வகையில் கேது அமர்ந்திருக்கிறார்.

வழிபாடு

விஐபிக்களால் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுக்கிரன் சில நேரத்தில் வலிமையை இழப்பதால் ஜூலை மாதம் முழுவதும் வண்டி, வாகனங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வண்டியை இரவல் தருவதை தவிர்ப்பது நல்லது. வடலூர் ஸ்ரீ வள்ளலார் ராமலிங்க சுவாமியை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்வது நன்மையை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+