Puthandu Palan: மீனம் ராசிக்கான புத்தாண்டு பலன்.. என்ன பலன்கள் கிடைக்கும்.. முழு விவரம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் மீனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மீனம் புத்தாண்டு பலன்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் உங்களுக்கு ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது. ஜென்ம சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். ஜென்மசனியில் இருந்தாலும் திருமண யோகம் உண்டாகும். வேலை, தொழில், உத்தியோகம், புகழ், பெயர், பதவி என அனைத்தும் கிடைக்கும் யோகம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு ஏற்றம்
எம்எல்ஏ, எம்பி, மந்திரியாகும் வாய்ப்பு அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும். உங்களுடைய செல்வாக்குகள் கூடும். உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றம் உங்களுக்கு நிச்சயமாக உண்டாகும். தொழில் ரீதியாக பலம் ஏற்படும். நல்ல அனுகூலமான காலகட்டமாக இருக்கும். எல்லா யோகத்தையும் பெறக்கூடிய யோகம் உண்டாகும்.
கோபம் வேண்டாம்
பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 49, 59, 75, 90 ஆவது பாடல்களை கேட்பது, படிப்பது நல்ல பலன்கலைத் தரும். செவ்வாய்க்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.
கிரகங்களின் நிலை
கேது, ராகுவுக்குள் கிரகங்கள் மாட்டியிருப்பதால் கோளார் பதிகத்தை சொல்வது, கேட்பது உங்கள் வாழ்க்கையை மாற்றும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம், அனுகூலம் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன கஷ்டங்கள், பண கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
புகழ்
வேற்று மதத்தினரால் புகழ் உண்டாகும். ஏற்றுமதி, ஷேர், டிரேடிங் என அனைத்திலும் அனுகூலம் ஏற்படும். ரியல் எஸ்டேட்டில் பெரிய சம்பாத்தியம் உண்டாகும். எல்லாவற்றிலும் சம்பாதிக்கும் யோகம் உள்ளது. நீங்களே நினைக்காத அளவுவுக்கு வெற்றிகள் ஏற்படும். நினைக்காத அளவுக்கு ஏற்றம் ஏற்படும். காரியசித்தி மாலை, அனுமன் சாலிஷா உங்களுக்கு மேன்மையைக் கொடுக்கும்.
நம்பிக்கை
வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படும். திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் மே 14 ஆம் தேதிக்குப் பிறகு அடுத்தடுத்து நிவர்த்தியாகும். திருமணத்தில் பாதிப்பு இருந்தவர்களுக்கு திருமணம் உண்டாகும். புத்திர சந்தானம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வருவது ஏற்றத்தை தரும்.
ஜெயம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எல்லாமே ஜெயம் உண்டாகும். சுப விரய பிராப்தம் உண்டாகும். மீனம் இருக்கும் வீட்டில் திருமண பாக்கியம் ஏற்படும். புதுப்புது விஷயங்கள் நடக்கும். ரத்தந்த உறவுகளில் ஏற்றம் ஏற்படும். நிறைய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். வீடு, நகை, ஷேர், நிலத்தில் முதலீடு செய்வீர்கள்.
பிள்ளைகளின் வண்டி வாகனங்களில் கவனம் தேவை. அடிவயிறு, முதுகுத் தண்டுவடம், மலக்குடல், சிறுநீரகப் பகுதிகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications