Puthandu Palan 2026: மிதுன ராசிக்கு சூப்பர் டூப்பர் யோகம்.. புத்தாண்டில் அடுத்தடுத்து அதிர்ஷ்டம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மிதுனம் புத்தாண்டு பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோகம் மாற்றம், படிப்பு மாற்றம் என எல்லாவிதமான அற்புதமான மாற்றங்களும் உங்களுக்கு ஏற்படும். ஜூன் மாதம் வரை நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் இருக்கக்கூடிய வீடுகளில் சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். நல்ல விஷயங்களை நீங்கள் தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது.
வாக்குகள் நிறைவேறும்
ஜூன் மாதம் வரை நீங்கள் கொடுத்த வாக்கை எல்லாம் காப்பாற்றி விட வேண்டும். அதற்குப் பிறகு எந்த வாக்கை கொடுத்தாலும் குடும்பத்தினருடன் கேட்டுவிட்டு செய்வது நல்லது. பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடக் கூடாது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். மார்ச் மாதம் 13 ஆம் தேதியில் இருந்து மிகுந்த கவனம் தேவை.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். மன அழுத்தம் நீங்கும். ஒரு நாள், இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை முடித்துக் கொள்வீர்கள். இடது பக்க ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை இருப்பவர்கள் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொழில் தொடங்கும் யோகம்
நிறைய வேலைகளை இழுத்துப்போட்டுக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. குரு பாதாகதிபதி ஜூன் மாதம் வரை ராசியில் இருப்பார். அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கூட்டுத் தொழில், தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. சின்ன பசங்கள் கூட பெரிய தொழிலை செய்யும் யோகம் உள்ளது. பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
சினிமா துறையில் இருப்பவர்கள் திடீர் பெயர், புகழ் கிடைக்கும். ரசிகர்கள் பின்தொடர்ந்து அலைமோதும் நிலை ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். அதனை தள்ளிப்போடாமல் இருப்பது நல்லது. ராகவேந்திரர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். காது, மூக்கு, தொண்டை, ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications