Puthandu Palan: ஸ்டாலின், பழனிசாமி, விஜய்.. தமிழ்நாட்டின் CM ஆகப்போவது யார்?.. ஜோதிடம் சொல்வதென்ன
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. திமுக, அதிமுக, தவெக என சட்டப் பேரவைத் தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் போவது யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும்.
அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர்
2026 இல் மகர ராசிக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2026 இல் ஜாக்பாட் அடிக்கும் ராசி என்றால் மகர ராசியினர் தான். அதற்குப் பிறகு மீனம், நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கும் விருச்சிகம் அதிர்ஷ்டத்தை பெறும். நிறைய பேர் புதிய வேலை வியாபாரத்தை தொடங்கும் யோகம் என்றால் கடக ராசியினருக்கு உண்டு. கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தைப் பெறுவார்கள். அந்த அளவுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். இந்த 5 ராசியினருக்கு புத்தாண்டு யோகங்களை அள்ளிக் கொடுக்கும்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகளவில் முன்னேற்றமடையும். புதிய வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற மாணவர்கள் உண்டாகும். மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்து வரும் சிம்ம ராசியினருக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். மொத்தத்தில் 2026 ஆம் ஆண்டு நல்ல நிலையில் தான் ஆரம்பிக்கிறது.
கெட்ட சம்பவங்கள்
பிப்ரவரி மாதம் வரை குரு வக்கிரமாக இருப்பார் என்பதால் மடம், கோயில், தர்மசத்திரம், அறக்கட்டளைகள், கோயிலுக்குள் நடக்கும் விஷயங்கள் போன்றவற்றில் கெட்ட சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. அதிக அளவில் கூட்ட நெரிசல்கள் ஏற்படும். டிசம்பர் மாதத்தில் கொங்கு மண்டலத்தில் அதீத வெள்ளம் ஏற்படும். கோயில்களில் இடிக்கப்படுவது, பேராசிரியரால் கல்லூரியை மூடும் நிலையை உண்டாகுக்குவது போன்ற நிலை ஏற்படும்.
சனியின் குரூர பார்வை ரிஷபம், கன்னி, தனுசு ராசியில் இருப்பதால் ஹாஸ்டல்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். மருந்துகளால் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 2027 மே மாதம் வரை இந்த நிலை இருக்கும். 2026 ஜூன் மாதத்திற்குப் பிறகு நல்ல நிலைமை ஏற்படும்.
தேர்தல் யாருக்கு சாதகம்
குரு எந்த இடத்துக்கு மாறுகிறாரோ அந்த இடத்தில் இருக்கும் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும். கடகம் என்றால் தமிழ்நாட்டுக்கு உரியது. ஒரு பாதி மிதுனத்தில் போனாலும் நமக்கு மேஜராக இருப்பது கடகம் தான். கடகம் என்பதால் நம் மாநிலத்துக்கு வரவோரை அரவணைத்துக் கொள்வோம். அரசியலுக்குப் பதிலாக சினிமாவைப் பற்றி தான் அதிகம் பேசும் நிலை இருக்கும்.
குறிப்பாக, 2026 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்துக்கு முன்பு தேர்தல் முடிந்துவிடும். தேர்தல் முடிவுகள் மே மாதம் வந்துவிடும். அதுவரை மிதுனத்தில் தான் குரு பகவான் இருக்கப் போகிறார். ஜூன் மாதத்திற்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி வந்து சேரும். வரக்கூடிய ஆட்சி அற்புதமான ஆட்சியாக இருக்கும். நிறைய அரசியல் கட்சிகள் ஒன்று சேருவதற்கும், விட்டுச் செல்வதற்கும் வாய்ப்புள்ளது.
ஜெயிலுக்கு போகும் அரசியல்வாதிகள்
3 அரசியல்வாதி ஜெயிலுக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. சூரியன், சனி, செவ்வாய் இருக்கும் நிலையில், சனி பகவான் வக்கிரத்தில் இருப்பதால் மிரட்டி நிறைய விஷயங்களை சாதிக்க நினைத்து அவை நடக்காமல் போவதால் 2 முதல் 3 அரசியல்வாதிகள் சிறை செல்லும் நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு பயணங்கள், வண்டி வாகனங்கள், விமான விபத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் டிசம்பரில் உள்ளது. ஒரு அரசியல்வாதிக்கு டிசம்பர் மாதம் ஆயுள் பாவத்தில் கண்டம் உள்ளது.
இது நடந்தா இவர் தான் சிஎம்
மு.க.ஸ்டாலினுக்கு 2026 நன்றாக இருக்கிறது. அவருடையா ஜாதகத்தில் பஞ்சம ஸ்தானத்தில் 2 உப நட்சத்திரங்கள் வருகிறார். லக்கின பிராப்தம் நன்றாக இருப்பதால் மு.க.ஸ்டாலின் ஜெயிப்பதற்கு அற்புதமான வாய்ப்புள்ளது. அதிமுகவும், தவெகவும் சேரவில்லை என்றால் ஸ்டாலின் ஜெயிப்பதற்கான வாய்ப்புள்ளது. அதிமுகவும், தவெகவும் சேர்ந்தால் எடப்பாடி பழனிசாமி ஜாதகத்தின்படி சிஎம் ஆகும் வாய்ப்புள்ளது. துணை முதல்வராக விஜய் அமரும் வாய்ப்புள்ளது.
அண்ணாமலைக்கு ஜாக்பாட்
டிசம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரைக்குள் அண்ணாமலைக்கு பெரிய வாய்ப்புள்ளது. 2026 ஜூன் மாதத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் என்பது போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். மொத்தத்தில் அரசியல் களமானது பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முழுவதுமாக மாறும். நிர்மலா சீதாராமனுடைய ஜாதகம் மிகவும் பலமாக உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி நல்லதாகவே இருக்க வேண்டும். சனி குரு இணைவு இருப்பதால் மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் நடக்கும்.
குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். விவசாயப் புரட்சி, இயற்கை விவசாயம், பசுமை புரட்சி, பால் உற்பத்தியில் பெரிய மாற்றம், மார்பகம், நெஞ்சகம் தொடர்பான கண்டுபிடிப்புகள் நடக்கும். அடுத்த ஒன்றரை வருடத்திற்கு நிறைய கண்டுபிடிப்புகள் நடக்கும் வாய்ப்புள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications