For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தன்வந்திரி பீடத்தில் ஒரே மேடையில் ஷோடச திருக்கல்யாண மஹோத்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஷோடச திருக்கல்யாண மஹோத்சவம், டாக்டர் முரளீதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும், இறைவன் இறைவி அருள் பெறவும் ஒரே மேடையில் ஒரே நேரத்தில், ஷோடச திருக்கல்யாண மஹோத்சவமும், மாலை 5.00 மணியளவில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தெய்வீக திருமணங்கள் நடைபெற்றன. நெல்லி ராஜா துளசி தேவி திருமணம், அரசமரம் வேப்பமரம் திருமணம் நடைபெற்றது.
16.03.2019 பங்குனி மாதம் 2ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை 1000க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்கள் பங்கேற்ற நாதசங்கம நிகழ்ச்சியுடன் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி யாகமும் சஹஸ்ர கலச திருமஞ்சனமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் நண்பகல் 12.00 மணியளவில் வருகை புரிந்து பாரதமாதா சிலைக்கு தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து மஹோத்ஸவம் 2019 முப்பெரும் விழாவையொட்டிய நினைவு பலகையை திறந்து வைத்தார்.

16 celestial wedding at sri dhanvantri peedam on sunday

மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற நெல்லிக்காய் பொடி திருமஞ்சனத்திலும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெற்ற மஹா ஆரதியிலும், சஹஸ்ர கலச ஹோம பூர்ணாஹுதியிலும் பங்கு கொண்டார். மேலும் முப்பெரும் விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

நீதிபதி டாக்டர் பி. ஜோதிமணி அவர்கள் வரவேற்புறை நிகழ்த்தினார். பிறகு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சார்பாக "யக்ஞஸ்ரீ" டாக்டர் முரளிதர ஸ்வாமிகளும், நிர்மலா முரளிதரன் அவர்களும் தமிழக ஆளுனர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு பொன்னாடை போற்றி, மாலை அணிவித்து கௌரவித்தார்கள். பிறகு ரெப்கோ வங்கியின் முன்னாள் இயக்குனர் ஆர். வரதராஜன் அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

16 celestial wedding at sri dhanvantri peedam on sunday

தமிழக ஆளுனர் தனது சிறப்புறையில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தையும், அதன் வளர்ச்சியையும் பெருமையாக கூறினார். பல சிறப்பு அம்சங்களைகொண்ட ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவிய திரு முரளிதார ஸ்வாமிகளை சிறப்பாக பாராட்டினார். மேலும் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நன்மைக்காக தினசரி தன்வந்திரி ஹோமம் மற்றும் பல சிறப்பு ஹோமங்களையும் நடத்தி வருவது பெருமைக்குறியது. முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் மேதகு தமிழக ஆளுனருக்கு ஸ்ரீ தன்வந்திரி பகவானின் திருவுருவ படமும், அமிருத கலசமும் அருட்பிரசாதமாக ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் வழங்கப்பட்டது. 1000 தவில் நாதஸ்வரம் வித்வான்களின் நாதசங்கமம் விழாவில் பங்கேற்ற ஐந்து கலைஞர்களுக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் ஆர். பிரகாஷ் அவர்கள் விழாவில் பங்கேற்றவர்களுக்கும், மற்றும் இவ்விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார். பின்னர் தேசியகீதம் பாடப்பட்டது.

16 celestial wedding at sri dhanvantri peedam on sunday

தொடர்ந்து ஏசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸின் சார்பாக "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் முரளிதர ஸ்வாமிகளுக்கு 1000 தவில் நாதஸ்வர வித்வான்கள் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் வாசித்ததிற்கான சிறப்பு விருதை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ஏ. ராமன் ஐ.ஏ.எஸ். அவர்கள் வழங்கினார்கள். இதில் கலவை தவத்திரு. சச்சிதானந்த ஸ்வாமிகள், கோவை மஹாப்ரத்யங்கிரா பீடம் வெங்கடேச சர்மா, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பளர், வட்டார வருவாய் அலுவலர், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் உரிமையாளர் மனோஹர் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும், இறைவன் இறைவி அருள் பெறவும் ஷண்மத தெய்வங்களுக்கு ஒரே மேடையில் ஒரே நேரத்தில், ஷண்மத பீடத்தில் ஷோடச திருக்கல்யாண மஹோத்சவமும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஸ்ரீபுரம் ஸ்ரீ நராயணி பீடம் சக்தி அம்மா அவர்கள், வனதுர்கா பீடம் ஸ்ரீ பிரசாத் ஸ்வாமிகள், இராணிபேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர். காந்தி அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

English summary
The Danvantri Arogya Peedam of Walajapet conducted special pooja marking its 15th anniversary and founder and peetadipadhi, Muralidhara Swamigal’s 58th jayanthi, on 17 March.16 Divine marriage conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X