ஆடிப்பெருக்கு விழா.. அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் கோலாகலம்..மங்கல ஆரத்தி
திருநெல்வேலி: தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்ரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளான இன்று 18 வகையான நெய்வேத்தியங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர். புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் தாலிபெருக்கும் நிகழ்ச்சி நடத்தினர். மேலும் காசி விசுவநாதர் கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தாமிரபரணி நதியால் திருநெல்வேலியில் 40,000 ஏக்கர், தூத்துக்குடியில் 46,107 ஏக்கர் என 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. தாமிரவருணியின் நீர், எல்லாவகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண் புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர் வேட்கை இவைகளை தீர்க்கும் புனித தீர்த்தமாக திகழ்கிறது.

இலக்கியங்களில் தாமிரபரணி
சங்க இலக்கியங்கள் தாமிரபரணியை 'தன் பொருநை', 'பொருநை' என்கின்றன. பெரிய புராணத்தில் சேக்கிழார் பாண்டிய நாட்டை தன்பொருநைப்புனல் நாடு என்கிறார். பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருநதி என்கிறார் கம்பர். அழகர் கருணைப்போல பொருநை பெருகிவரும் அழகைப் பாரும் பள்ளீரே என்கிறது முக்கூடற்பள்ளு.

ஜீவநதி தாமிரபரணி
தாமிரம் என்றால் செம்பு. தாமிரக் கனிமம் கலந்த தண்ணீர் என்பதால் தாமிரபரணி பெயர் வந்திருக்கலாம். 'தமிழ் கண்டது வைகையும் பொருநையும்' என்கிறார் பாரதியார். தாமிரபரணி பாசனமும், அணைக்கட்டுகளும் தாமிரபரணியின் இருபுறமும் பாசனம் செழிக்க முதல் ஏழு அணைக்கட்டுகளும் கால்வாய்களும் பண்டைய கால அரசர்களினால் அமைக்கப்பட்டிருந்தன. கடைசியாக 1869ல் ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கட்டப்பட்டது.

நீர்த்தேக்கங்கள்
தாமிரபரணி நதியில் எட்டு நீர்த்தேக்கங்கள், அவற்றில் 11 கால்வாய்கள் இருக்கின்றன. மலையில் ஏழு துணை ஆறுகளும், சமவெளியில் ஐந்து துணை ஆறுகளும் மொத்தம் 12 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. தோன்றுமிடம் தொடங்கி தூத்துகுடி மாவட்டம், புன்னைக்காயல் வரை 120 கி.மீ. பயணித்து மன்னார் வளகுடாவில் கலக்கிறது.

ஆடி பதினெட்டாம் பெருக்கு
தாமிரபரணி நதிக்கு ஆடி 18 தினத்தை முன்னிட்டு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலிகள் வழிபாடு நடத்தினர். மேலும் மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.

புதுமணத்தம்பதியர்
அதேபோல் ஆடி மாதத்தில் 18ஆம் நாள் பெருக்கு அன்று காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளை பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் அங்கு மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர். அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்ரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளான இன்று 18 வகையான நெய்வேத்தியங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர். புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடைபெற்றது.

தாமிரபரணியில் வழிபாடு
அம்பாசமுத்திரம் தாமிர பரணி ஆற்றங்கரையில் காசி விசுவநாதர் கோவில் படித்துறையில் திரளான பெண்கள் திரண்டு தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து புதுமண தம்பதிகள் மட்டுமல்லாது ஏற்கனவே திருமணமான பெண்களும் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர். இவ்விழாவில் அம்பிகா ஜூவல்லரி திருமூல தவ மையம் மீனாட்சி நாதன், அம்பை நகர் மன்ற தலைவர் கேகேசி பிரபாகர பாண்டியன்,அம்பை வியாபாரிகள் சங்க தலைவர் பன்னை சந்திரசேகர், செயலாளர் அச்சுதன், பொருளாளர் கோவிந்தராஜன்,வாசுதேவராஜா, வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications