Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி மாதம் காவிரியில் ஒரு நாளாவது புனித நீராட வேண்டும் - ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்வதால் நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் கடந்து ஓடிப்போகும், காவிரியில் நீராடும் போது ஆத்ம பலம் தேக பலம் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். இந்த மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம்.

Aippasi matha thula snanam in cauvery river importance and benefits

ஐப்பசி மாதம் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்த மாதம். இந்த மாதத்தில்தான் நவராத்திரி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும் இந்த மாதத்தில் சிவ தரிசனம் செய்தால் பசிப்பிணி நீங்கும் என்பது ஐதீகம்.

சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரிய பகவான், ஐப்பசி மாதத்தில் நீச்சமடைகிறார். இதனால் இந்த
மாதத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும். இதனை அறிந்தே நம் முன்னோர்கள் பருவகால நிலைகளை நான்கு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர்.

சித்திரை மழை பேய்ஞ்சு கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும் என்பது போல், ஐப்பசி மாதம் அடைமழை காலத்தின் தொடக்க காலம் என்றும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் மாதம் என்றும் நம் சித்தர்கள் கணித்து கூறியுள்ளனர்.

" ஐப்பசி யதனிலோடுந் நீர்வரத்து குன்று
மதனோடு நீருக்கு அலைதலுஞ் சேரும்
தானியமெலாம் பொன்னுக்கு நிகரொப்ப
நிற்கும் மெய்யே"

என்ற கொங்கணர் சித்தர் பாட்டிலிருந்து ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதத்தில் ஆறுகளில் நீர் பெருக்கு குறைந்து, நீருக்கு சிறிது தட்டுப்பாடும் அதிகரித்து தானியங்கள், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களில் விலைவாசியும் கூடும் என்று அறிந்து கொள்ளலாம்.

ஐப்பசி மாதத்தில் அனைத்து புண்ணிய நதிகளும் காவிரியில் சங்கமிப்பதாக ஐதீகம். இதனால் இம்மாதம் முழுவதும் காவிரி நதி பாய்ந்தோடும் அனைத்து இடங்களிலும் மக்கள் நீராடுவது வழக்கம். மற்ற மாதங்களில் காவிரியில் நீராட முடியாவிட்டாலும் கூட ஐப்பசி மாதத்தில் ஒரே ஒரு நாளாவது நீராடுவது சிறப்பாகும்.

Aippasi matha thula snanam in cauvery river importance and benefits

அழகு, ஆரோக்கியம், கல்வி, செல்வ வளம், வலிமை, சந்தான பாக்கியம் ஆகியவற்றை இந்த துலா ஸ்நானம் தருவதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஐப்பசி மாத கடைசி நாளன்று மயிலாடுதுறையில் காவிரி நீராடல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை காவிரி கடை முழுக்கு என்றழைக்கின்றனர்.

ஐப்பசி மாதத்தில் ஏதாவது ஒரு நாளன்று ஸ்ரீரங்கம் சென்று காவிரியில் நீராடி ஸ்ரீரங்கநாதர் மற்றும் ஸ்ரீரங்கநாயகி, ஆண்டாள் தாயாரை வழிபட்டால் வாழ்வில் சகல பாவங்களும் நீங்கும். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இங்கு நீராடி ஸ்ரீரங்கநாதரையும் தாயார்களையும் வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீரும், பொருளாதார நிலையும் மேம்படும். மேலும் திருமணமாகாதவர்களுக்கு பிடித்தமான மனதிற்கினிய வாழ்க்கைத் துணையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நம் வாழ்வில் துன்பங்களை போக்கி வசந்தத்தையும் வெளிச்சத்தையும் கொடுக்கும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதும் இம்மாதத்தில் தான். தீபாவளித் திருநாளன்று அனைத்து நீர் நிலைகளிலும் கங்கா தேவி தோன்றுவதாக ஐதீகம். இதனாலேயே நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள், அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவதுண்டு. இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். மேலும், திருமணமான புதுமணத் தம்பதியர்கள் தலை தீபாவளி என்னும் முதல் தீபாவளி கொண்டாடுவதும் இம்மாதத்தில் தான்.

வடமாநிலங்களில் தீபாவளித் திருநாள் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான திரயோதசி நாளன்று தனத்திரயோதசி மற்றும் எம தீபம் ஏற்றி வைக்கின்றனர். இரண்டாம் நாளான சதுர்த்தசி தினத்தில் நரக சதுர்த்தசி மற்றும் தீபாவளி திருநாளும், மூன்றாம் நாளான அமாவாசை அன்று கேதார கவுரி விரதமும், நான்காம் நாளான பிரதமை நாளில் கார்த்திகை ஸ்நானமும், ஐந்தாம் நாளான துவிதியை தினத்தில் எமத் துவிதியை என்றும் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஐப்பசி மாத தேய்பிறை திரயோதசி நாள் தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாள் மஹாலட்சுமியின் திருவருளை முழுமையாக நம்மிடம் சேர்க்கும் நாள் ஆகும். இந்நாளில் வாங்கும் பொருட்கள் பன்மடங்காக பெருகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆகவே அன்றைய நாளில் தங்கம் முதல் அத்தியாவசிய பொருட்கள் என நமக்கு தேவையான பொருட்களை வாங்குவதும், முதலீடு செய்வதும் வெகு சிறப்பாகும்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது போல், இந்த ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும். முருகப்பெருமான், தீமையின் உருவமாக விளங்கிய சூரபத்மனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்று ஆட்கொண்டதன் அடையாளமான கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதும் இம்மாதத்தில் தான்.

ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தை கண்குளிர தரிசித்தால் கோடி புண்ணியம் கிட்டும். பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த ஐப்பசி மாதத்தில் ஒருநாளாவது காவிரியில் நீராடுங்கள் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்வதால் நரம்பு தளர்ச்சி குறையும். நோய்கள் கடந்து ஓடிப்போகும், காவிரியில் நீராடும் போது ஆத்ம பலம் தேக பலம் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+